சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"என்னன்ணே, இப்படியா கவுண்ட்டர் போடறது".. டிவி ஸ்டார்களின் "காமெடி காட் ஃபாதர்" வடிவேல் பாலாஜி

விஜய் டிவி புகழ் வடிவேலு பாலாஜியின் நினைவுகளை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்

Google Oneindia Tamil News

சென்னை: "எங்களுக்கு எல்லாம் காட் ஃபாதர் வடிவேலு பாலாஜிதான்" என்று எத்தனையோ தருணங்களில் மனம் விட்டு சொல்லி உள்ளனர் விஜய் டிவி காமெடி ஷோ பிரபலங்கள்.. அந்த அளவுக்கு பலரை வளர்த்து விட்டவர் வடிவேலு பாலாஜி.

காயம்பட்ட எத்தனையோ இதயத்துக்கு மருந்தானவர்.. பலரது மனபாரத்தை குறைத்தவர்.. கிளம்பும் டென்ஷனையும், எகிறும் பிரஷரையும் தூக்கி வீசி எறிய செய்தவர்.. இது பலருக்கும் கிடைத்திராத ஒரு அரிய வரப்பிரசாதம்.. ஒருவகையில் கொடுப்பினை என்றும் சொல்லலாம்.

வாய்விட்டு சிரிக்கும்போதெல்லாம், நம்மிடம் ஒட்டி கொண்டிருந்த இறுக்கம் மொத்தமும் வெளியே தெரித்து ஓடிவிடும்.. வேக வேகமாகத்தான் பேசுவார்.. ஆனாலும் அதில் ஒரு ஸ்பிரிட் இருக்கும்.. ஏட்டிக்கு பேட்டியாக கவுண்டர்கள் தருவது என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல.. அரைச்ச மாவையே அரைக்கிற மபெடி இவரிடம் இருக்காது.. முக்கியமாக டபுள் மீனிங் இருக்காது.

எல்லோரையும் சிரிக்க வைத்த கலைஞன்.. சிகிச்சைக்கு கூட பணமில்லாமல்.. மனதை உலுக்கும் நடிகரின் மரணம்!

 வித்தியாசம்

வித்தியாசம்

ஒவ்வொரு காமெடியும் ஒவ்வொரு தினுசு.. ஒவ்வொரு புதுசு.. வித்தியாசமான யோசனைகள், எதிர்பாராத டைமிங்குகளால் நம்மை அசர வைத்தவர். கலக்கப்போவது யாரு சீசன் 4-ல் தான் வடிவேலு பாலாஜி அறிமுகமானார்.. அவர் அதில் வெற்றி பெறவில்லை என்றாலும், அவரது மாடுலேஷனும், பாடி லேங்குவேஜும் மக்களை ஈர்த்துவிட்டது.. நடிகர் வடிவேலுவை எத்தனையோ பேர் இமிடேட் செய்து மிமிக்ரி செய்திருக்கிறார்கள்.. ஆனால், யாருமே செய்ய முடியாத கேரக்டர்களைகூட, வடிவேல் பாலாஜி துணிந்து எடுத்து பேசியதுதான் அவரது துணிச்சல்!

 கெட்-அப்

கெட்-அப்

நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என எல்லாலிவித மாடுலேஷனும் பாலாஜிக்கு அத்துப்படி! அதனால்தான் விஜய் டிவியின் தவிர்க்க முடியாத ஒருவராகவும், அசைக்க முடியாத பிம்பமாகவும் வடிவேல் பாலாஜி இப்போது வரை மிளிர்ந்து வந்துள்ளார்.. "அது இது எது" நிகழ்ச்சிக்கு வரும் கெஸ்ட்டுகள்கூட வடிவேல் பாலாஜி இன்னைக்கு வருவாரான்னு கேட்பாங்களாம். எப்போதுமே இவரது லேடி கெட்-அப் அனைவரையும் கவர்ந்த ஒன்று!

 வாழ்க்கை

வாழ்க்கை

பொதுவாக, ஊர், உலகையே சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்களின் சொந்த வாழ்க்கை என்பது மிகவும் துயரமானது.. பூடகமானது.. அதற்கு பாலாஜியும் விதிவிலக்கல்ல.. வறுமையை தின்று தின்றுதான் பல வேளைகளில் பொழுதை கழித்துள்ளார்.. மார்ச்சுவரியில் போஸ்ட்மார்ட்டம் பண்ற டிப்பார்ட்மென்ட்ல வேலை பார்த்தாராம்.. என்னே ஒரு முரண்!! பிணவறைக்கும் நகைச்சுவைக்கும் என்ன சம்பந்தம்? வறுமையில் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்த நிலையில்தான், படிப்படியாக சொந்த திறமையால் உயர்ந்துள்ளார்.

 பஞ்ச் வசனம்

பஞ்ச் வசனம்

கற்பூரம் அடித்து சத்தியம் செய்து சொல்லலாம் இதுவரைக்கும் பாலாஜி யாரையுமே சிரிக்க வைக்காமல் போனதே இல்லை என்று... இவரிடம் இன்னொரு ஸ்பெஷாலிட்டி, அவரது டைமிங்.. ஸ்கிரிப்ட்டில் இல்லாததைகூட இவர் ஆன் தி ஸ்பாட்டில் பேசிவிடுவாராம்... உடன் நடிப்பவர்கள் நிஜமாகவே திணறிவிடுவார்களாம்.. எப்போ, என்ன பஞ்ச் போடுவார், கவுண்ட்டர் தருவார் என்ற பீதி உள்ளுக்குள் நடிக்கும்போது, இருந்து கொண்டே இருக்குமாம்.

 காட் ஃபாதர்

காட் ஃபாதர்

ஆனால், இப்போதுள்ள விஜய் டிவி காமெடி ஷோ நடிகர்கள் எல்லாம் தங்களுடைய காட் ஃபாதர் யார் என்று கேட்டால் வடிவேலு பாலாஜியைதான் சொல்வார்கள்.. நேரத்துக்கு செட்டுக்கு வந்துடணும்... டைமிங் ரொம்ப முக்கியம், ஸ்க்ரிப்ட் தவிர சொந்தமா, கவுன்ட்டர் போட கத்துக்கணும் என்று சொல்லி, அதற்கு உதாரணமாக தானே அந்த ஷோவில் அதை செய்தும் காட்டுவாராம்.. "என்னன்னே.. இப்படி எல்லாம் கவுண்ட்டர் போட்டீங்கன்னா ரொம்பவே திணறி போயிடறோம்" என்பார்கள்.. காட் ஃபாதர் என்று வடிவேலு பாலாஜியை தவிர வேறு யாரையும் இதுவரை இவர்கள் சொன்னது இல்லை என்பதே சிறப்புதான்.

நகைச்சுவை

நகைச்சுவை

மிக சிறந்த திறமைசாலியாக தன்னை எப்போதுமே நிலைநிறுத்தி கொண்டார்.. ஒரு கவுண்ட்டர் சொல்லி சிரித்து முடிப்பதற்குள் இன்னொரு கவுண்ட்டரை சொல்வது என்பது மிகவும் கஷ்டமானது.. இதில் யாரையுமே காயப்படுத்த காமெடி என்பது அதிலும் அரிதானது.. புரண்டு நெளியும் டபுள் மீனிங் டயலாக்குகளை இவர் பயன்படுத்தியதில்லை.. காமெடி என்ற பெயரில் தெரியாமல்கூட யார் மனசையும் புண்படுத்தியது இல்லை.. இன்று ஒரு நகைச்சுவையே சரிந்துவிட்டது அதிர்ச்சியை தந்து வருகிறது.. சிரித்து சிரித்தே நம்மை டயர்டாக்கி விட்ட இந்த மனிதரை காலம் ஒருபோதும் மறக்காது!

English summary
Vadivel Balaji TV comedian's godfather
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X