நீட் தேர்வு நல்லது" அனைத்து கட்சி கூட்டத்திலிருந்து அவசரமாக வெளியேறிய வானதி சீனிவாசன்! பரபர பேட்டி
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இருந்து வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்துள்ளார். நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பதை பாஜக எதிர்ப்பதாக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோறும் தீர்மானத்தில் பாஜகவிற்கு உடன்பாடில்லை என்று அந்த கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடக்கம் முதலே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. திமுக தலைமையிலான அரசு அமைந்த பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையில் நீட் விலக்கு எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

மனு அளித்த எம்பிக்கள்
இந்த விவகாரம் தொடர்பாக லோக்சபா திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அதிமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் செயலாளரிடம் மனு அளித்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க பலமுறை முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.

போராட்டம் தொடரும்
சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குகோரும் சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
நீட் தேர்வுக்கு எதிரான அரசியல், சட்ட, மக்கள் போராட்டம் தொடரும் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று 110 விதியின் கீழ் அறிவித்தார்.

அனைத்துக்கட்சிக் கூட்டம்
முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது போல தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் இன்று காலை 10.30 மணி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டசபையில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் துரைமுருகன், அதிமுக சார்பில் விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன்,காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விசிக சார்பில் சிந்தனைச் செல்வன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், பாமக சார்பில் ஜி.கே.மணி, மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

முற்றுப்புள்ளி
நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏழை மாணவர்களால் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று கூறினார். மாநில உரிமையும் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றும் உரிமையும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதால் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

வானதி சீனிவாசன் விளக்கம்
இந்த நிலையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இருந்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். வெளிநடப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியது அப்போது அதனை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது. இப்போது நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு விலக்கு பெறுவது தொடர்பாக முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்கிறது

மாணவர்களின் நலன்
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பதை பாஜக எதிர்ப்பதாக கூறினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோறும் தீர்மானத்தில் பாஜகவிற்கு உடன்பாடில்லை என்றும் தெரிவித்தார். நீட் தேர்வு வருவதற்கு முன்பு அரசுப்பள்ளி மாணவர்கள் குறைந்த அளவிலேயே மருத்துவப்படிப்பு பயின்றனர். நீட் தேர்வு வந்த பின்னர் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப்படிப்பில் சேர்ந்து படித்து வருவதாக குறிப்பிட்டார். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற்ற கட்டணக்கொள்ளையை நீட் தேர்வு மூலம் தடுத்து நிறுத்தியுள்ளோம் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிதி உதவி
மருத்துவக் கல்லூரிகளில் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த அனைத்து மாணவர்களுக்கும் 60 சதவிகித நிதி உதவியை மத்திய அரசு செய்கிறது பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக உருவாக்கப்பட்டது அல்ல நீட் தேர்வு. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது தான் நீட் தேர்வு என்று கூறினார். நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளனர். சமூக நீதி அடிப்படையில் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. கிராமப்புற அரசு மாணவர்களுக்கு நீட் தேர்வு எதிராக உள்ளதாக தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை வைக்கின்றனர். கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களின் நலனை 7.5 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாத்து வருகிறது.

வெள்ளை அறிக்கை வேண்டும்
12 வருடங்களாக தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றி அமைக்க படாமல் இருந்ததால் நீட் தேர்வை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது, ஆனால் பழியை மாணவர்கள் மீது போடுகிறார்கள். நீட் தேர்வு வருவதற்கு முன் மாணவர்கள் எவ்வளவு கல்விக் கட்டணம் கட்டினார்கள், தற்போது எவ்வளவு கட்டுகிறார்கள் என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வேண்டும். மாணவர்களைத் தற்கொலைக்குத் தூண்டி அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக வேண்டாம். இன்னொரு உணர்ச்சி அரசியலை முன்னெடுக்க வேண்டும் என பாஜக கேட்டுக்கொள்கிறது.
Recommended Video

சூழ்நிலை காரணம்
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை சந்திக்க மத்திய அமைச்சர் அமித் ஷா நேரம் ஒதுக்காமல் இருந்ததற்கு அவரது பணி சுமை காரணமாக இருக்கலாம். அதை தாண்டி டெல்லியில் கோவிட் தொற்று பரவல் அதிகமாக உள்ளது, சூழல் சரியான உடன் அதற்கான நேரம் ஒதுக்குவார் என்று கூறினார். அரசுக்கு தேவையான தரவுகளின் அடிப்படையிலேயே நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை தந்திருக்கிறது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டார்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications