சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாஸ்மாக் திறப்புக்கு எதிராக வீடுகளில் இருந்தே விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் இருந்தே விடுதலைச் சிறுத்தைகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

VCK hold Protest against opening of TASMAC

கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மே 17-ந் தேதி வரை லாக்டவுன் அமலில் இருந்தாலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

VCK hold Protest against opening of TASMAC

இதனால் நாடு முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுகின்றன.

VCK hold Protest against opening of TASMAC

டாஸ்மாக் மதுபான கடைகளில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கூட்டங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று வீடுகளில் இருந்தபடியே டாஸ்மாக் திறப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான திருமாவளவன் தமது அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவருடன் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும் மற்றொரு எம்.பி.யுமான ரவிக்குமாரும் பங்கேற்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது வீட்டின் முன்பாக கையில் பதாகையுடன் போராட்டம் நடத்தினார். இதேபோல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் தங்களது வீடுகளில் இருந்தபடியே போராட்டங்களை நடத்தினர்.

English summary
VCK Party today hold protet against the opening of the TASMAC Liqour Shops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X