சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சிஎம் ஸ்டாலின்".. லாக்டவுன் போடுங்க. ரூ.4000 கொடுங்க".. விசிக கோரிக்கையால்.. எகிறும் எதிர்பார்ப்பு

முழு லாக்டவுன் போட வேண்டும் என விசிக வலியுறுத்தி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "லாக் டவுன் போடுங்கள்.. ரூ.4000 கொடுங்கள்" என்று திமுக அரசுக்கு தன்னுடைய முதல் கோரிக்கையை முன் வைத்துள்ளார் விசிக எம்பி ரவிக்குமார்.

இந்த முறை தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு மாபெரும் உதவியது விசிக என்பதை மறுக்க முடியாது.. குறிப்பாக திருமாவளவனின் பிரச்சார பேச்சுக்கள், அடித்தட்டு மக்களை தட்டி எழுப்பி, திமுக கூட்டணிக்கு ஆதரவாக எழுப்ப பிரதான காரணமாக இருந்திருக்கிறது.

4 சுயேச்சைகள்.. பக்காவா செக் வைத்த ரங்கசாமி.. ஆடிப்போன பாஜக.. புதுச்சேரியில் அடுத்து என்ன?4 சுயேச்சைகள்.. பக்காவா செக் வைத்த ரங்கசாமி.. ஆடிப்போன பாஜக.. புதுச்சேரியில் அடுத்து என்ன?

இந்நிலையில், தமிழகத்தின் தொற்று பாதிப்பு மோசமாகி வருகிறது.. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கவில்லையே தவிர, கடந்த 4 நாட்களாகவே, தொற்று தடுப்பு குறித்த தீவிரமான ஆலோசனைகளை அதிகாரிகளிடம் மேற்கொண்டு வருகிறார்.

 பரவல்

பரவல்

தமிழகத்தில் கட்டுப்பாடுகள் ஏராளமாக போடப்பட்டு வந்தாலும், இந்த பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.. 2வது அலை எதிர்பார்க்காததைவிட ரொம்ப பயங்கரமாக இருக்கிறது.. எனவே, கட்டுப்பாடுகள் மட்டும் போதாது, முழு லாக்டவுன் போட வேண்டும் என்று விசிகவின் ரவிக்குமார் ஒரு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ட்வீட்

ட்வீட்

இதுகுறித்து அவர் ஒரு பதிவும் போட்டுள்ளார்.. அதில், "கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை, இறப்பு எண்ணிக்கை கூடுகிறது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போதாது. முழு லாக் டவுனை அறிவிக்கவும், ஜூன் 3 ஆம் தேதியன்று வழங்குவதாக அறிவித்த கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாயை இப்போதே வழங்கிடவும், மாண்புமிகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முன்வரவேண்டும்.
#தேவை_முழு_லாக்டவுன்" என்று பதிவிட்டுள்ளார்.

 கருத்துக்கள்

கருத்துக்கள்

இன்றைய தமிழகத்தின் சூழலில், எம்பியும், விசிகவின் பொதுச் செயலாளருமான ரவிக்குமாரின் இந்த ட்வீட் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.. இதையடுத்து, பல்வேறு தரப்பினர் திரண்டு வந்து இந்த கமெண்ட்டுக்கு தங்கள் கருத்தையும் பதிவிட்டு வருகின்றனர்..

 ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

"சென்னை, வேலூர் போன்ற நகரங்களில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் தட்டுப்பாடு உள்ளதாக செய்திகள் வருகிறது.. கவனத்தில் கொள்ள கேட்டுகொள்கிறேன்" என்றும், இங்கிலாந்து,அயர்லாந்து போல் முழு ஊரடங்கும்,தடுப்பூசியும் மட்டுமே கொரோனா தாக்கத்தை தடுக்கும், ஆனால் ஏழை மக்களை பட்டினி இல்லாமல் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.. தேவைபட்டால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் குறைந்த அளவு தற்காலிகமாக குறைக்கலாம்" என்றும் பல்வேறு யோசனைகளை ட்விட்டர்வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

 திருமாவளவன்

திருமாவளவன்

அதேபோல, நேற்று திருமாவளவன் மதுரையில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "புதிதாக பொறுப்பேற்க உள்ள திமுக ஆட்சிக்கு, கொரோனா முதன்மையான ஒரு சவால்... தீவிர சிகிச்சை பிரிவில், ஏராளமானோர் அனுமதிக்கப்பட முடியாத நிலை உள்ளது... ஆக்சிஜன் பற்றாக்குறையால், செங்கல்பட்டு மருத்துவமனையில், 11 பேர் இறந்துள்ளனர். உயிர்காக்கும் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்து, கூடுதலான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன...

 மத்திய அரசு

மத்திய அரசு

மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஊரடங்கால் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். ஆனால், அதை விடவும் உயிரை காப்பாற்றுவது முக்கியமானது... முழு ஊரடங்கு தேவைப்பட்டால், மத்திய - மாநில அரசுகள் செய்ய வேண்டும். இதற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

எனவே, முழு ஊரடங்கு என்ற ஒற்றை கோரிக்கையை விசிக வலுவாக முன்வைத்துள்ளதுடன், இன்னும் பதவியேற்காத "தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு" வேண்டுகோள் விடுத்த ரவிக்குமாரின் இந்த ட்வீட்டும் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது.. கூட்டணியில் உள்ள கட்சியே லாக்டவுனுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கான எதிர்பார்ப்பும் பெருகி வருகிறது!

English summary
VCK MP Ravikumar demands to implement full curfew
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X