Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EXCLUSIVE : "அது ரெண்டு பக்க அறிக்கை இல்ல.. முதல்வரின் நல்ல மனது”.. நெகிழ்ந்த விசிகவின் வன்னியரசு.!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுகவினர் பதவி விலக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரண்டு பக்க அறிக்கை அவரது தலைமைப் பண்பை காட்டுவதாக விசிகவின் வன்னியரசு கூறியுள்ளார்.

நகராட்சித் தலைவர் பேரூராட்சித் தலைவர் நகராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை தங்களின் கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுக தலைமை ஒதுக்கியது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது கட்சித்தலைமை அறிவிப்பை மீறி ஏராளமான இடங்களில் திமுகவினர், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை கைப்பற்றி வருகின்றனர்.

கட்சிகள் கோரிக்கை

கட்சிகள் கோரிக்கை

கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் செயல்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதே போல பல சம்பவங்கள் நடைபெற்றது. இந்நிலையில் தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கழக தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின் அறிக்கை

ஸ்டாலின் அறிக்கை

கட்சியின் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டநாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில் கூறியிருந்தார்.

விசிக வன்னியரசு

விசிக வன்னியரசு

தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுகவினர் பதவி விலக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரண்டு பக்க அறிக்கை அவரது தலைமைப் பண்பை காட்டுவதாக விசிகவின் வன்னியரசு கூறியுள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய வன்னியரசு, பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுகவினர் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டது சற்றே ஏற்றுக்கொள்ள தக்கதுதான் என்றாலும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக தலைமை கலந்து பதவிகளை ஒதுக்கியதாகவும். ஆனால் அதனை சில திமுகவினர் ஏற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக கூறினார்.

Recommended Video

    Rain Alert! இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும்! Indian Meteorological Dept | Oneindia Tamil
    முதல்வருக்கு நன்றி

    முதல்வருக்கு நன்றி

    இருந்தும் திமுகவினர் உடனடியாக பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளது வரவேற்பதாக கூறிய வன்னியரசு, கூனிக் குறுகி நிற்கிறேன் என கூறி இருப்பதைப் பார்க்கும்போது நல்ல மனதையும் நல்ல தலைமைப் பண்பையும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கொண்டிருப்பதைக் காட்டுகிறது என கூறியுள்ளார். அவரது இரண்டு பக்க அறிக்கையில் கூட்டணி தர்மத்தை காக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ள வன்னியரசு மறைமுக தேர்தலைப் போலவே நேரடித் தேர்தல் நடைபெற்றபோது கூட்டணி கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவினரை பதவி விலகச் சொல்லி மீண்டும் அங்கு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் வன்னிஅரசு கூறியுள்ளார்

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+