திசை தெரியாமல் தடுமாறும் பாஜக.. தமிழகத்தில் அமித்ஷா கணக்கு அத்தனையும் நொறுங்குதே? பாமக குறுக்கே தவெக
சென்னை: "பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் மீது ஊழல் புகார்கள் இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.. இந்திய அரசியலின் சாணக்கியன் என்று கருதப்படும் அமித்ஷா, தமிழகத்தில் அதிமுக மற்றும் பாமகவின் உள்விவகாரங்களைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்" என்று தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் பத்திரிக்கையாளர் மணி.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "அதிமுக பாஜக கூட்டணி அறிவிப்புக்கு பிறகு, எந்த கட்சியுமே என்டிஏ கூட்டணிக்கு வரவில்லை.. என்டிஏவில் இருந்த ஓபிஎஸ், டிடிவி போன்றோர் வெளியேறிவிட்டார்கள்.. அதிமுகவில் இருந்த செங்கோட்டையனும் வெளியேறிவிட்டார்..

பாமக - அப்பா - மகன் சண்டை
அதிமுகவுக்கு அடுத்தபடியாக வலுவான கட்சியாக கருதப்பட்டது பாமகதான்.. 4 சதவீதம் ஓட்டுக்களுடன், வடமாவட்டங்களில் 50 தொகுதிகளில் 8 முதல் 10 சதவீத வாக்குகளை பெற்றுள்ள கட்சி.. இவர்களும் இந்த முறை பாமக போன்ற கட்சிகளுக்கு அந்த வலிமை குறைந்துள்ளது..இதற்கு முக்கியக் காரணமாக பாமகவில் நிலவும் அப்பா-மகன் சண்டைதான். டெல்லிக்கு போய் மகன் மீது புகார் தருவது, சிபிஐ விசாரணை கோருவது என வித்தியாசமான சம்பவங்கள் நடந்து வருகின்றன..பாமகவுக்கு நேர் எதிரியான கட்சியான விசிககூட இதுவரை அப்படியொரு கோரிக்கை வைக்காத நிலையில, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகள்கூட அப்படியொரு கோரிக்கை வைக்காத நிலையில், மகனுக்கு எதிராக சிபிஐ விசாரணையை துரிதப்படுத்தும்படி கோரி உள்ளார் ராமதாஸ்.. மொத்தத்தில் பாமக என்பதே சின்னாபின்னமாக கிடக்கிறது.. இதனால் என்டிஏ நொறுங்கி போய் கிடக்கிறது.
பாஜகவுக்கு மிகப்பெரிய சேலஞ்ச்
ஆனால் திமுக வலுவான கூட்டணியாக உள்ளது.. மக்கள் நலத்திட்டங்களிலும் திமுக வலுவாக உள்ளது, சித்தாந்த ரீதியாகவும் பாஜகவை எதிர்ப்பதில் ஒன்றுபட்ட கூட்டணியாக திமுக வலுவாக உள்ளது.. இதுல எங்கிருந்து அமித்ஷா கனவு நனவாவது? அந்தவகையில் பாஜகவுக்கு தமிழகம் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து கொண்டிருக்கிறது.அதிமுக உதவி இல்லாமல் பாஜகவால் 1 சதவீதம்கூட ஜெயிக்க முடியாது.. இதனால் பாஜகவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. மற்ற மாநிலங்களை போல அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றை ஏவிவிட்டு, ராமதாஸ் போன்றவர்களை எல்லாம் வழிக்கு கொண்டுவர முடியாது.. காரணம், அவர் ஒரு சமுதாய தலைவர். ஏதாவது நடவடிக்கை எடுத்தால், ஒட்டுமொத்த சமுதாயமும் பாஜகவுக்கு எதிராக திரும்பிவிடும். இதேதான் அன்புமணி விஷயத்திலும் நடக்கும்..ராமதாஸை சமாதானப்படுத்த குருமூர்த்தி, சைதை துரைசாமி முதல் 16 பேர் பஞ்சாயத்துக்கு வந்தார்கள்.. ஒன்னுமே வேலைக்காகவில்லை.. அதனால்தான் கூட்டணியும் வலுவாகவிலலை..
விஜய்க்கு செல்லும் பாமக ஓட்டு
விஜய்யும் வழிக்கு வரவில்லை.. இதனால் பாமகவின் வாக்கு வங்கி கணிசமாக நடிகர் விஜய்யின் கட்சி நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.. 2011 தேர்தலில் விசிக மற்றும் பாமக வாக்குகள் எப்படி விஜயகாந்திற்கு சென்றதோ, அதேபோல் இப்போது விஜய்க்கு செல்லக்கூடும்..நான்கு முனைப் போட்டி நிலவினால் அது திமுகவிற்கே நேரடி பலனை தரும்.. அரசுக்கு மிகப்பெரிய கெட்ட பெயர் வராத வரை திமுகவின் கை ஓங்கியிருக்கும்.. அந்தவகையில் தமிழகத்தில் பாஜக திசை தெரியாமல்தான் திண்டாடி கொண்டிருக்கிறது.
அரசியல் சாணக்கியன் அமித்ஷா
அமலாக்கத்துறை சோதனைகள் இப்போது ஒரு "பூச்சாண்டியாக" மட்டுமே பார்க்கப்படுகிறது.. மக்கள் இதைப் பார்த்து பார்த்து பழகிவிட்டார்கள்.. திமுக அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்குகள் இருந்தாலும், அனைவரையும் கைது செய்வது சாத்தியமில்லை; அப்படி செய்தால் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் மீது ஊழல் புகார்கள் இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.. இந்திய அரசியலின் சாணக்கியன் என்று கருதப்படும் அமித்ஷா, தமிழகத்தில் அதிமுக மற்றும் பாமகவின் உள்விவகாரங்களைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications