“அதிமுகவை கபளீகரம் செய்ய விஜய் பிளான்.. சந்திரமுகியாக மாறும் கங்கா”.. மூத்த பத்திரிகையாளார் பளிச்!
சென்னை: "கங்கா சந்திரமுகியாக மாறுவது போல, அதிமுகவாக மாற விஜய் முயற்சிக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பற்றிப் பேசுகிறார். அதிமுகவை பற்றி நேரடியாக பேசாமல், அந்தக் கட்சியின் ஃபார்முலாவை பின்பற்றி அந்தக் கட்சியின் தொண்டர்களை வளைக்கும் வேலையில் இறங்கி உள்ளார் விஜய்." என நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார். தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் நமக்கு அளித்துள்ள பேட்டியில், "தவெக 3ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வு ஒரு கலை நிகழ்ச்சி. அதில், தமது அரசியல் எதிரி திமுக என அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். விஜய்யால் திமுகவுக்கு நிச்சயமாக ஒருசில பிரச்சனைகள் வரலாம். விஜய் அதிமுக வாக்கு வங்கியையும் குறி வைக்கிறார்.
ஆனால், விஜய் நினைப்பது போல முதலமைச்சர் என்பது சாத்தியமில்லை. அதற்கு ஏற்ற உழைப்பும் இல்லை, அதற்கான அரசியல் செய்தியையும் அவர் தெளிவுபடுத்தவில்லை. இன்னும் 4 வாரங்களில் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிடப் போகிறது. தேர்தலுக்கு இன்னும் அதிக காலம் இல்லாத அதற்கேற்ற பேச்சை விஜய் பேசவில்லை.
விஜய் தமது கட்சிக்காரர்களுக்கு அரிதானவராக இருக்கக்கூடாது. சொந்தக் கட்சி நிர்வாகிகளே விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளத்தான் விரும்புகிறார்கள். அடிக்கடி பார்த்துக்கொண்டால் அப்படி புகைப்படம் எடுத்துக்கொள்வதில் மட்டுமே ஆர்வம் காட்டமாட்டார்கள். ஒரு அரசியல் தலைவர் இந்நேரம் கட்சியினருக்கு நன்கு பழகி இருக்க வேண்டும்.
வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து அரசியல் செய்கிறார் என்ற பெயரை வேறு எந்தக் கட்சி தலைவரும் வாங்கவில்லை. கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறார். அவரை வெளியில் வரச் சொல்வதே அவருக்கு எரிச்சலூட்டுகிறது.
விஜய் திமுகவை எதிர்த்து அரசியல் செய்கிறார். ஆனால் சொந்தமாக தனக்கென ஒரு நம்பிக்கையை உருவாக்க முடியவில்லை. தனக்கு முன்பே இருக்கும் கட்சிகளின் வாக்குகளை சுலபமாக கபளீகரம் செய்ய நினைக்கிறார். அதிமுக தான் திமுகவை வீழ்த்திய இயக்கம். அந்த சக்சஸ் ஃபார்முலாவை பிடிக்க நினைக்கிறார்.
கங்கா சந்திரமுகியாக மாறும் முயற்சி போல, அதிமுகவாக மாற விஜய் முயற்சிக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பற்றிப் பேசுகிறார். அதிமுகவை மையமாக வைத்தே அரசியல் செய்கிறார் விஜய். அதிமுகவை பற்றி நேரடியாக பேசாமல், அந்தக் கட்சியை மீளுருவாக்கம் செய்யும் வேலையில் இறங்கி உள்ளார் விஜய்.
-
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications