10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தவெக 8 முதல் 10 தொகுதிகளில் வெல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக லோக்போல் (Lok Poll) நிறுவனம் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜய்யின் தவெக 23.9% வாக்குகளை பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது தவெக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்டவற்றை முடித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. அதேபோல் விஜய்யின் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அத்தனை கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட சூழலில், தேர்தல் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது.

இம்முறை விஜய் களமிறங்கி இருப்பதால், தேர்தல் யார் வெல்வார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகளில் யாரின் வாக்குகளை விஜய் அதிகம் பிரிப்பார் என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேசிய அளவில் பிரபலமான கருத்துக்கணிப்பு நிறுவனமான லோக்போல் தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 500 வாக்காளர்களிடம் கருத்துக்களை பெற்றுள்ள லோக்போல், மொத்தமாக 1.17 லட்சம் பேரிடம் கருத்துக்கணிப்பை எடுத்திருக்கிறது. அதன்படி திமுக கூட்டணி 181 முதல் 189 தொகுதிகளையும், சுமார் 40.1 சதவிகித வாக்குகளையும் கைப்பற்றும் என்று கணித்துள்ளது. அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி 38 முதல் 42 சீட்டுகளை மட்டுமே பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அதிமுக - பாஜக கூட்டணி 29% வாக்குகளை கைப்பற்றும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் விஜய்யின் தவெக 8 முதல் 10 சீட்டுகள் வரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும், சுமார் 23.9 சதவிகித வாக்குகளை பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெல்லாது என்றும், 4.9 வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகள் 2.1 சதவிகித வாக்குகளை பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளார். முதல் தேர்தலிலேயே சுமார் 24% வாக்குகளை பெறுவார் என்று கணித்திருப்பது விவாதமாகி இருக்கிறது. இந்த கருத்துக்கணிப்பு தவெக தொண்டர்களிலேயே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்!












Click it and Unblock the Notifications