திருத்தணியில் தவெக வேட்பாளருக்கு வந்த தனிமை கொடுமை.. விஜய் கட்சியில் தெறித்து ஓடும் நிர்வாகிகள்?
சென்னை: விஜய் கட்சி வேட்பாளர் பற்றின நியூஸ்தான் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.. ஆம், நடிகர் விஜய் தொடங்கிய தவெக, இந்த முறை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. தமிழகம் முழுவதும் தவெக தனித்து போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் ஆரோக்கியமான நகர்வாகப் பார்க்கப்பட்டாலும், திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் அரங்கேறி வரும் ஒரு வினோதமான சம்பவம் கட்சி மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக அரசியலில் "மாற்றத்தை முன்னெடுப்போம்" என்ற முழக்கத்தோடு தொடங்கப்பட்ட நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

முதலில் தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தவமாய் தவம் இருக்கிறது என செய்திகள் வெளியாகின. ஆனால் அது புஸ்வானமாகி போனது. அதற்கு அடுத்தபடியாக தங்களுடன் கூட்டணி வைக்க சாம, பேத, தான தண்டம் என அனைத்து வழிகளிலும் பாஜக முயற்சி மேற்கொண்டது. ஆனால் அதையும் விஜய் நிராகரித்து விட்டார்.
விஜய் கட்சி வேட்பாளர்
இதையடுத்து விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக பல்வேறு காய் நகர்த்தல்களை மேற்கொண்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கும் விஜய் நோ சொல்லிவிட்டதாகவே செய்திகள் வெளியாகின.
இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிட்டு தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டுமென விஜய் நினைத்து விட்டாரோ என்று எண்ணும் அளவிற்கு எந்த கூட்டணியிலும் சிக்காமல் தற்போது தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிடுகிறது.
தவெக திருத்தணி
தமிழகம் முழுவதும் தவெக தனித்துப் போட்டியிடுகிறது என்பது ஆரோக்கியமான செய்தி என்றாலும், ஒரு தவெக வேட்பாளர் ஒரு தொகுதியில் தன்னந்தனியாக பிரச்சாரம் செய்வது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம். இந்த வினோதம் அரங்கேறி இருப்பது திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் தான்.
திருத்தணி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக வழக்கறிஞர் சத்திய குமார் என்பவரை அறிவித்தது தவெக தலைமை. அவரும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு தனது பரப்புரையை தொடங்கி விட்டார். நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது தன்னந்தனி ஆளாக பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறாராம் சத்திய குமார்.
திருத்தணி சத்தியமூர்த்தி
தமிழக அரசியலில் தவெக தனித்துவிடப்பட்டிருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருத்தணியில் தவெக வேட்பாளர் ஒருவரே தனியே விடப்பட்டிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. திருத்தணி தொகுதியில் தவெக நிர்வாகிகளும், தொண்டர்களும் தனக்கு ஆதரவாக வேலை செய்யவில்லை என வழக்கறிஞர் சத்தியகுமார் குற்றம் சாட்டுகிறாராம். ஆனால் தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் வேறு விதமாக குற்றம் சாட்டுகிறார்கள்.
தமிழக வெற்றி கழக திருத்தணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்தியகுமார் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மதிப்பதே இல்லை எனவும், தங்களை ஒருமையில் மிகக் கேவலமாக பேசுவதால் அந்த வேட்பாளரை மாற்ற வேண்டுமென திருத்தணி லோக்கல் தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
சத்தியமூர்த்தி - வேட்பு மனு தாக்கல்
சத்திய குமார் வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும்போது மாவட்டச் செயலாளரையோ, கட்சியின் நிர்வாகிகளையோ அழைக்காமல் தன்னிச்சையாக, தானாகவே சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதுதான் தமிழக வெற்றிக்கழக திருத்தணி நிர்வாகிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
அதோடு கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கஞ்சா குடிப்பவர்கள் என்றும் குடிகாரர்கள் என்றும் கூறி தரக்குறைவாக சத்யகுமார் பேசுவதாகவும் தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தவெக கட்சிக்கும், கட்சி தலைமைக்கும், தளபதிக்கும் தரக்குறைவு ஏற்படுத்தும் வேட்பாளர் சத்யகுமாரை மாற்ற வேண்டும் என தற்போது போர்க்கொடித் தூக்கி இருக்கிறார்கள், தொண்டர்களும் நிர்வாகிகளும்
திருத்தணியில் நடப்பதில் எது உண்மை என்பது இன்னும் தெளிவாக தெரியாத நிலையில் என்னடா இது சத்திய குமாருக்கு வந்த சோதனை என வாக்காளர்கள் பரிதாபத்தோடு பார்க்கிறார்களாம் தவெக வேட்பாளரை...ஆக, தலைமை எடுக்கும் முடிவைப் பொறுத்தே திருத்தணியில் தவெகவின் வெற்றி வாய்ப்பு அமையும் என்பது மட்டும் நிதர்சனம்..!!
- நமது சிறப்பு நிருபர்!
-
விஜய் பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில் தவறு செய்திருந்தாலும்! அவரது வேட்புமனு ரத்தாகாதாமே! ஏன்? -
Vijay: புதுச்சேரியிலும் திருந்தாத ரசிகர்கள்! விஜய்யை பார்க்க சாலை விதிகளை மீறும் தவெகவினர்! -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
பெரம்பூரில் மூடிக் கிடக்கும் விஜய் தேர்தல் அலுவலகம்.. இவ்வளவுதான் தவெக தேர்தல் ஏற்பாடு! -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக்












Click it and Unblock the Notifications