கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தனர். இதில் விஜய் தனது கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட் வழங்கியிருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இது தொடர்பாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கின்றன.
விஜய் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இருக்கிறார். 'ஜெயா நகர் ப்ராபர்டி லிமிடெட்' என்கிற பெயரில், விஜய் நடத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராக அவரது கார் ஓட்டுநர் இருக்கிறார். அவரது மகனுக்குதான் தற்போது எம்எல்ஏ சீட் வழங்கப்பட்டிருக்கிறது.

தவெக வேட்பாளர் லிஸ்ட்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், இந்த முறை தனித்து போட்டியிடுகிறார். நேற்று முன்தினம், அவர் கட்சி சார்பில் களம் காண இருந்த 234 வேட்பாளர்களையும் அறிவித்திருந்தார். இங்குதான் பஞ்சாயத்து வெடித்தது. விஜய் அறிவித்த வேட்பாளர்களில் 106 பேர் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள். அதாவது, நாங்கள்தான் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாற்று என்று பேசி வந்த விஜய், இந்த கட்சிகளிலிருந்து தவெகவில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
கோடி கணக்கில் பணம்
மட்டுமல்லாது, வேட்பாளர்களில் பலர் மீது உள்ளூர் தவெக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். போஸ்டர் ஒட்டியவர்களுக்கும், கழகப்பணி செய்தவர்களுக்கும்தான் சீட் கொடுக்கப்படும் என்று பக்கம் பக்கமாக பேசிவிட்டு, கோடிக்கணக்கில் பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் சீட் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் அறிவித்து, சீட் கொடுத்திருப்பதாக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.
அதேபோல, இந்த வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் அனைவரையும் ஈர்த்த சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது விஜய் தனது கார் ஓட்டுநர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு சீட் கொடுத்திருந்தார்.
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்
பார்த்தீங்களா.. எங்க தலைவர் சாமானிய மக்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்று தவெகவினர் நெகிழ்ச்சியடைந்தனர். ஆனால், விஜய் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ததில், இந்த கார் ஓட்டுநர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தன. அதாவது விஜய் நடத்தி வரும் 'ஜெயா நகர் ப்ராபர்டி லிமிடெட்' எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டவர்தான் கார் ஓட்டுநர் ராஜேந்திரன். அவரது மகனுக்குதான் தற்போது சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சீட் வழங்க காரணம்
விஜய் நடத்தும் நிறுவனத்திற்கு எதற்காக அவரது கார் ஒட்டுநர் இயக்குநராக நியமிக்கப்பட வேண்டும்? ஒருவேளை விஜய் தனது வருமானத்தை மறைக்க முயற்சிக்கிறாரோ? என்று கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பியிருக்கின்றனர்.
-
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக்












Click it and Unblock the Notifications