மாறுபட்ட விஜய் வயது.. 51ஆ, 52ஆ? திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்கிறாரா தவெக தலைவர்
சென்னை: விஜய் வயது என்ன? பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது என்ன? என்ற குழப்பம் தவெகவில் மேலோங்கி உள்ளது.. தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த மனுக்களில் இடம்பெற்றுள்ள முரண்பட்ட தகவல்கள், அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
கடந்த மார்ச் 30-ம் தேதி பெரம்பூர் தொகுதியில் விஜய் தனது முதல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதில் தன் மீது எந்தவிதமான குற்ற வழக்குகளும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், சில தினங்களுக்கு பிறகு திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த மனுவில், 2025-ம் ஆண்டு மதுரை மாநாட்டின் போது நடந்த மோதல் தொடர்பான ஒரு வழக்கும், மார்ச் 30-ம் தேதி கொளத்தூர் பிரசாரத்தின் போது விதிமீறல் தொடர்பாகப் பதியப்பட்ட மற்றொரு வழக்கும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மாறுபட்ட விஜய் வயது
வழக்கு விவரங்கள் மட்டுமின்றி, வயது தொடர்பான தகவலிலும் குளறுபடி நீடிக்கிறது. பெரம்பூர் மனுவில் தனது வயது 52 எனக் குறிப்பிட்டுள்ள விஜய், திருச்சி கிழக்கு மனுவில் 51 எனக் குறிப்பிட்டுள்ளார். ஒரே வேட்பாளர் இரு வேறு தொகுதிகளில் வெவ்வேறு தகவல்களை அளித்திருப்பது சட்ட ரீதியான சிக்கல்களை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தரப்பினர் சொல்லும்போது, பழைய வழக்குகள் இருப்பது பிறகே தெரியவந்ததாகவும், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி பிரமாணப் பத்திரத்தில் திருத்தங்கள் செய்ய இன்னும் அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தவெக தலைவர் பிரமாண பத்திரம்
ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் 4 மனுக்கள் வரை தாக்கல் செய்ய முடியும் என்பதால், விடுபட்ட தகவல்களைச் சேர்த்து பெரம்பூர் தொகுதியில் இன்று அதாவது ஏப்ரல் 4ம் தேதி, திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய விஜய் முடிவு செய்துள்ளாராம்.
சட்ட வல்லுநர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, வேட்புமனு பரிசீலனையின் போது சரியான தகவல்களை அளித்து முரண்பாடுகளைக் களைந்தால் மனு தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இருந்தாலும், இதன் இறுதி முடிவு தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கைகளிலேயே உள்ளது.
இதனிடையே, பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என்ற வதந்திகள் பரவி வருகின்றன.. விஜய் அங்கிருந்து பின்வாங்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பெரம்பூர் மனு தள்ளுபடி?
ஒருவேளை பெரம்பூரில் மனு தள்ளுபடி செய்யப்பட்டாலோ அல்லது உத்தேசமாக வாபஸ் பெறப்பட்டாலோ, அது தவெகவின் தேர்தல் வியூகத்தில் பெரும் பின்னடைவை கட்டாயம் ஏற்படுத்தும்.
காரணம், சென்னையில் ஒரு தொகுதி, திருச்சியில் ஒரு தொகுதி எனத் திட்டமிட்டுப் போட்டியிடும் விஜய், வட தமிழகம் மற்றும் மத்திய தமிழகம் என இரண்டையுமே குறிவைத்துள்ளார். இதில், பெரம்பூரில் சிக்கல் ஏற்பட்டால், அது அந்தத் தொகுதி தொண்டர்களிடையே சோர்வை உண்டாக்குவதோடு, எதிர்க்கட்சிகளுக்குப் பெரிய அரசியல் ஆயுதமாகவும் மாறும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இருந்தாலும், திருத்தப்பட்ட மனுத் தாக்கல் மூலம் இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அக்கட்சி உறுதியாக நம்புகிறது. எனவே இன்று வேட்புமனு தாக்கல் விவகாரத்தில் என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
விஜய் வேட்பு மனு பெரம்பூரில் தள்ளுபடி செய்யப்படுமா? சட்ட ரீதியாக விஜய்க்கு உள்ள வாய்ப்பு என்ன? -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
“அந்த தகுதி மட்டும் போதுமா?.. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?” விஜய் மீது சேரன் தாக்கு! -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல்குமார்.. அதிருப்தியில் தவெக! பின்னணியில் ராஜன் செல்லப்பா












Click it and Unblock the Notifications