Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vikram: சண்டைல கால் ஒடிஞ்சி போச்சு! ராடு வச்சிருக்காங்க.. வெட்ட முடியாது! நிஜ சம்பவத்தை கூறிய கமல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் கால் எலும்பு முறிவு குறித்து வில்லனிடம் நகைச்சுவையாக சொன்ன காட்சிகள் தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3ஆம் தேதி வெளியானது விக்ரம் திரைப்படம். ஆக்ஷன் திரில்லர் கலந்த இந்த படத்தில் கமல்ஹாசனுடன் மலையாள நடிகர்கள் பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராமன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் சூர்யா நடித்திருப்பார். அனேகமாக நடிகர் சூர்யாவுடன் கமல் நடிப்பில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என தெரிகிறது.

4 முன்னணி ஹீரோக்கள்

4 முன்னணி ஹீரோக்கள்


இந்த திரைப்படத்தில் 4 முன்னணி ஹீரோக்கள் நடித்துள்ளதால் அவர்களுடைய ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆவலாக தியேட்டர் முன் குவிந்துள்ளார்கள். பிளாக் ஆபரேஷன் ஸ்வாடிடம் இருக்கும் போதை பொருள் கன்டெய்னர் லாரியை மீட்க விஜய் சேதுபதி போராடுவதுதான் கதை.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் அடியாளாக நடித்தவர் ஜாபர் சாதிக். இவர் உயரம் குறைவாக இருப்பார். விஜய் சேதுபதிக்கு ஏதேனும் ஆபத்து என்றால் அவர் தவழ்ந்து வந்து எதிராளியின் பின்னங்கால் நரம்பை கட்டிங் பிளேயர் கொண்டு கட் செய்வார். இதில் எதிரி சரிந்து கீழே விழும் போது அவரை விஜய் சேதுபதியும் அவரது அடியாட்களும் கொல்வர்.

கன்டெய்னர் லாரி

கன்டெய்னர் லாரி

கன்டெய்னர் லாரியை தேடிக் கொண்டு கமல்ஹாசன் இருக்கும் இடத்திற்கு தனது படையுடன் விஜய் சேதுபதி வருவார். அப்போது அந்த கும்பலை பீரங்கியை கொண்டு அழித்து கொண்டிருப்பார் கமல்ஹாசன். அப்போது ஜாபர் சாதிக், தவழ்ந்து வந்து கமலின் கால்நரம்பை கட்டிங் பிளேயர் கொண்டு கட் செய்ய முற்படுவார்.

கிளிங் சப்தம்

கிளிங் சப்தம்

அந்த சமயம் பார்த்து கிளிங் என சப்தம் கேட்கும். இதனால் ஜாபர் அதிர்ச்சி அடைவார். உடனே கமல்ஹாசன் திரும்பி பார்ப்பார். அப்போது ஜாபரிடம் நான் ஒரு கதை சொல்லட்டா என கேட்பார். ஜாபர் பயத்துடன் பார்ப்பார். அதற்கு கமல்ஹாசன் ஹும்ம் சொல்லுடா என்பார். அதற்கு ஜாபரும் ஹும் என்பார்.

சண்டைக்கு போனப்ப

சண்டைக்கு போனப்ப

அப்போது கமல், நான் ஒரு திருவிழாவில் சண்டைக்கு போனப்ப என் கால் எலும்பு ஒடிஞ்சி போச்சு. ராடு வச்சிருக்கிறாங்க , உன்னால வெட்ட முடியாது என்று சிரித்து கொண்டே கூறுவார். இதனால் தியேட்டரில் சிரிப்பலை எழுந்தது. நிஜமாகவே கமல்ஹாசனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ராட் வைக்கப்பட்டிருந்தது.

Recommended Video

    Vikram Review | Yessa ? Bussa ? | Kamal Haasan #Review
    நிஜ சம்பவம்

    நிஜ சம்பவம்

    கடந்த 2016ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்ததால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த இரும்பு ராடு பொருத்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு அந்த ராடு அகற்றப்பட்டது. பின்னர் உடனே 2021 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவரது காலை யாரோ மிதித்து விட்டதால் வலி ஏற்பட்டது. பின்னர் ஓய்வுக்கு பிறகு அவரது வலி சரியானது. இந்த நிஜ சம்பவத்தை தனது படத்தில் காமெடியாக சொன்னது அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+