கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு?
சென்னை: வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியிலான தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிகத்துக்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வீட்டு பயன்பாட்டு சிலிண்டரை வணிக ரீதியாக பயன்படுத்தினால் புகார் அளிக்கலாம்; வீட்டு சிலிண்டரை வணிக ரீதியில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்; பொதுமக்கள் 044 28592828 என்ற எண்ணிலும், 1967 என்ற உதவி எண்ணிலும் புகாரளிக்கலாம் என தமிழ்நாடு அரசின் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளுக்கு வணிக சிலிண்டர் விநியோகம் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வீட்டு உபயோக சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தால், பொதுமக்கள் வீட்டு உபயோக சிலிண்டர் கேட்டு, கேஸ் ஏஜென்சி நிறுவனங்களிடம் முன்பதிவு செய்வது அதிகரித்துள்ளது.
மேலும், சிறிய ஹோட்டல்கள், டீக்கடைகள் நடத்துபவர்கள், வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. வணிக சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டு உபயோக சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியிலான தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வீட்டு பயன்பாட்டு சிலிண்டரை வணிக ரீதியாக பயன்படுத்தினால் புகார் அளிக்கலாம்; வீட்டு சிலிண்டரை வணிக ரீதியில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்; பொதுமக்கள் 044 28592828 என்ற எண்ணிலும், 1967 என்ற உதவி எண்ணிலும் புகாரளிக்கலாம் என தமிழ்நாடு அரசின் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
ரேபிஸ் ஊசி போட்டுக்காத தூத்துக்குடி மாணவி.. உடம்பில் ஏறிய விஷம்! அரசே முன்வந்து செய்த இறுதி சடங்கு -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications