அதிமுக பொதுக்குழு தீர்ப்பால்.. எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை! கேபி முனுசாமி பரபரப்பு பேட்டி
சென்னை: ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் இந்த வெற்றியை பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
இந்நிலையில் ஈபிஎஸ் தரப்பில் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பேட்டியளித்த கேபி முனுசாமி இந்த தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை என கூறியுள்ளார்.

அதிமுகவில் புதிய பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவதாக கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, ஓபிஎஸ் தரப்பில் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும், ஜூன் 23க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் கூறினார். மேலும், இந்த ஆண்டு ஏற்கெனவே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மற்றொரு பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த தீர்ப்பையடுத்து ஓபிஎஸ் தரப்பினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், "இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்துள்ள வெற்றி என்பது நிரந்தரமானது கிடையாது" என்று கூறியுள்ளார். மேலும், "இந்த தீர்ப்பு நிச்சயம் இறுதியான தீர்ப்பு கிடையாது. இதுவரை நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் கட்சியின் விதிகளின்படியே நடந்துள்ளது. எனவே இதன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக இனி அடுத்த பொதுக்குழுவை கூட்ட ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. மேலும் இனி வரும் பொதுக்குழுவை ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக வந்துள்ள இந்த தீர்ப்பு குறித்து விரைவில் ஈபிஎஸ் தரப்பு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈபிஎஸ் ஆதரவாளர், கே.பி.முனுசாமி "இந்த தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தியதை போலவே ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் முழு மனதாக தீர்மானங்களை ஏற்றுக்கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர்களை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்?












Click it and Unblock the Notifications