சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஸ்கார் மேடையில் தமிழுக்கு பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரகுமான்...அவர் கருத்தை வரவேற்கிறோம் - அண்ணாமலை

ஏ.ஆர்.ரஹ்மான், பல இடங்களுக்குச் சென்று, ஆஸ்கர் மேடைக்குச் சென்று ஆஸ்கர் வாங்கியபோதுகூட அங்கும் தமிழில் பேசி தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை

நம்முடைய மொழியை தாங்கிப் பிடிக்க நினைப்பவர்கள் மீது தனிநபர் தாக்குதலோ, அந்த நபர்களின் கருத்துரிமையை எதிர்த்து குரல் கொடுப்பதோ, பாஜகவின் நோக்கம் கிடையாது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசி தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

அவரது பேச்சு, இந்தி பேசாத மாநிலங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காளி நிறம் கருப்புதானே.. ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட காளி நிறம் கருப்புதானே.. ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட

ஏ.ஆர். ரகுமான்

ஏ.ஆர். ரகுமான்

ஏ.ஆர் ரகுமான், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழணங்கு என்று போட்டுள்ள அந்தப் படத்தில் தமிழ்த் தாய் கையில் வேலுடன் ஆக்ரோஷமாக காட்சி தருகிறார். அந்த வேலின் முனையில் தமிழின் சிறப்பு எழுத்தான "ழ" இடம் பெற்றுள்ளது. தமிழ்த் தாயின் கீழே, பாரதிதாசன் எழுதிய "இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு உரிமைச்செம் பயிருக்கு வேர்" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ளது. வெள்ளை ஆடை உடுத்தி கறுப்பாக பார்க்கவே படு ஆக்ரோஷமாக காட்சி தருகிறது இந்த ஓவியம். அந்த ஓவியத்திற்கு எதிராக பலரும் கருத்து கூறி வருகின்றனர். தமிழன்னையை அவமானப்படுத்தி விட்டதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை பேச்சு

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை,
ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசி தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். நம்முடைய மொழியைச் சார்ந்தவர்கள், நம்முடைய மொழியை தாங்கிப் பிடிக்க நினைப்பவர்கள் மீது தனிநபர் தாக்குதலோ, அந்த நபர்களின் கருத்துரிமையை எதிர்த்து குரல் கொடுப்பதோ, பாஜகவின் நோக்கம் கிடையாது என்று என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தனி நபர் தாக்குதல் கிடையாது

தனி நபர் தாக்குதல் கிடையாது

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ட்வீட் பதிவு செய்திருந்தார். பாஜகவைப் பொருத்தவரை ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்கின்றோம். எந்த விஷயத்திற்காகவும் கூட, நம்முடைய மொழியைச் சார்ந்தவர்கள், நம்முடைய மொழியை தாங்கிப் பிடிக்க நினைப்பவர்கள் மீது தனிநபர் தாக்குதலோ, அந்த நபர்களின் கருத்துரிமையை எதிர்த்து குரல் கொடுப்பதோ, பாஜகவின் நோக்கம் கிடையாது, வழக்கம் கிடையாது.

அனைவருக்குமே பெருமை

அனைவருக்குமே பெருமை

ஏ.ஆர்.ரஹ்மான், பல இடங்களுக்குச் சென்று, ஆஸ்கர் மேடைக்குச் சென்று ஆஸ்கர் வாங்கியபோதுகூட அங்கும் தமிழில் பேசி தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அந்த மேடையில் எல்லாப் புகழும் இறைவனுக்கு என்று பேசியிருந்தார். அது நம் அனைவருக்குமே பெருமைதான். எனவே அனைவருக்கும் கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. அதில் எந்தத் தவறும் கிடையாது. எங்களுடைய கருத்தும் அதுதான்.

Recommended Video

    Hindi இணைப்பு மொழியா? Amit Shah-வின் கருத்துக்கு கூலாக பதில் சொன்ன AR Rahman
    இந்தி கட்டாயம் கிடையாது

    இந்தி கட்டாயம் கிடையாது

    எனக்கு இந்தி தெரியாது, நான் இந்தி பேசமாட்டேன். ஆனால் தேவையென்றால் இந்தியை கற்றுக்கொள்வேன் என்று கூறினார். உங்களுடைய வேலைக்குத் தேவை, படிப்புக்குத் தேவை, தொழிலுக்கு தேவை என்றால் தயவுசெய்து கற்றுக்கொள்ளுங்கள். எந்த காரணத்தைக் கொண்டும் கட்டாயமாக ஒரு மொழியைக் கற்றுக்கொண்டுதான், நாம் இந்தியர் எனக் காட்டிக்கொள்ள வேண்டிய நிலைமை யாருக்கும் கிடையாது.
    என்றார். எந்த காலத்திலும் இந்தி திணிப்பை பாஜக எதிர்த்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து எதிர்ப்போம் என்பதில் ஒரு வாக்குவாதம், விவாதம் வேண்டாம் என்பதற்காகத்தான் இப்போது முற்றுப்புள்ளி வைக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

    English summary
    BJP state president Annamalai has said that the BJP has no intention of making personal attacks on those who want to uphold our language or speaking out against the ideology of those individuals. He also said that AR Rahman was the one who spoke in Tamil on the Oscar stage and added pride to Tamil and the people of Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X