சித்திரை முழு நிலவு நாளைக் கொண்டாடுவோம்.... விரைவில் சொந்தங்கள் ஒன்று கூடுவோம் - டாக்டர் ராமதாஸ்
வரும் தை முழு நிலவு நாளையும், சித்திரை முழு நிலவு நாளையும் வெகு சிறப்பாகவும், அமைதியாகவும் சொந்தங்களுடன் கொண்டாடுவோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: சித்திரை முழுநிலவு நாளை நம்மை விட சிறப்பாக, எழுச்சியாக கொண்டாட எவராலும் முடியாது. இடையில் தடைபட்ட சித்திரை முழுநிலவு நாளையும், தை முழு நிலவு நாளையும் வெகு சிறப்பாகவும், அமைதியாகவும் சொந்தங்களுடன் கொண்டாடுவோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாட்டாளி மக்களின் ஒன்று கூடல் நாளான சித்திரை முழுநிலவு நாள் இன்று. காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா கொண்டாடப்படுவது இந்த நாளில் தான். மாமல்லபுரத்தில் பல்லவர்களும் சித்திரை முழு நிலவு நாளை மக்களுடன் கொண்டாடியிருக்கிறார்கள். இது கொண்டாட்டங்களின் திருநாள்!

சித்திரை முழுநிலவு நாளின் முதன்மை நோக்கமே சொந்தங்களுடன் கடற்கரைகளிலும், நீர்நிலைகளின் கரைகளிலும் கூடி, குடும்பக் கதைகள் பேசி மகிழ்வது தான். இது நமது பண்பாடு. அந்தப் பண்பாட்டை விட்டுக் கொடுக்காமல் வாய்ப்புள்ள இடங்களில் சொந்தங்கள் ஒன்று கூடி கொண்டாடுங்கள்!

சித்திரை முழுநிலவு நாளை நம்மை விட சிறப்பாக, எழுச்சியாக கொண்டாட எவராலும் முடியாது. இடையில் தடைபட்ட சித்திரை முழுநிலவு நாளையும், தை முழு நிலவு நாளையும் 2020ஆம் ஆண்டில் கொண்டாடுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் நாம் மேற்கொண்ட போது தான் கொரோனா தடுத்து விட்டது!

கொரோனா தடைகள் எல்லாம் இப்போது அகன்று விட்ட நிலையில் அடுத்து வரும் தை முழு நிலவு நாளையும், சித்திரை முழு நிலவு நாளையும் வெகு சிறப்பாகவும், அமைதியாகவும் சொந்தங்களுடன் கொண்டாடுவோம். சொந்தங்களின் சந்திப்பில் புத்துணர்வையும், உத்வேகத்தையும் மீண்டும் பெறுவோம்!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications