Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனந்த தாண்டவம்.. ஆஹா "மைனருக்கு" எதிராக பட்டுனு குதித்த ஓபிஎஸ்! பாஜக ஸ்டைலில் பாய்ச்சல்.. செம கோபம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசும் கூட்டத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் யூடியூப் சேனல் ஒன்று, இறை நம்பிக்கைக்கு எதிரான பல்வேறு வீடியோக்கள், வரலாற்று பேச்சுக்கள், இந்து புராணங்களில் இருக்கும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வைத்து வீடியோ வெளியிடுவது வழக்கம்.

இந்த யூடியூப் சேனலில் மைனர் விஜய் என்பவர், மூலம் தில்லை நடராஜர் பற்றி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் நடராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியிருந்தார். இது இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மைனர் விஜய்

மைனர் விஜய்

மைனர் விஜயை உடனே கைது செய்ய வேண்டும் என்று பாஜக, இந்து மக்கள் கட்சி ஆகியவை கோரிக்கை விடுத்தன. இந்து மக்கள் கட்சி சார்பாகவும் இது தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசும் கூட்டத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை

அறிக்கை

அவர் தனது அறிக்கையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்திய நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமயச் சுதந்திர உரிமை, அதாவது Right to Freedom of Religion அளிக்கப்பட்டு இருக்கிறது. சமயச் சுதந்திர உரிமை என்பது, தனி நபர்கள் அல்லது சமூகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாகவும், பொதுவிலோ, தனிப்பட்ட முறையிலோ, நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கும், வழிபடுவதற்கும், சடங்குகளை நடத்துவதற்குமான சுதந்திரம் ஆகும். அதே சமயத்தில் எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுவதும், அதுகுறித்து அரசு வாய்மூடி மவுனியாக இருப்பதும் வேதனையளிக்கிறது.

கருத்து உரிமை

கருத்து உரிமை


முருகப் பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனை இருந்தாலும், அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் தனது தனித் தன்மையால் சிறந்து நிற்பது கந்த சஷ்டி கவசம் ஆகும். ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள் அவர்களால் எழுதப்பட்ட கந்தர் சஷ்டி கவசத்தை, பாம்பன் சுவாமிகள் அவர்களால்

அடிக்கடி மனம் உருகி பாடப்படும் கந்த சஷ்டி கவசத்தை 2020 ஆம் ஆண்டு - இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டம் என்னும் யூ டியூப் சேனல். இது தொடர்பாக புகார் வந்தவுடன், கருப்பர் கூட்டம் நெறியாளரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததோடு, இதற்கு போட்டியாக இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தி பேசிய இந்து தமிழ் பேரவையைச் சேர்ந்தவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்த அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

கருப்பர் கூட்டம்

கருப்பர் கூட்டம்

இது தவிர, பிற நபர்களின்மீதும் பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்து இருக்கிறது இந்தக் கூட்டம். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நடராஜர் மற்றும் தில்லைக்காளி குறித்து மைனர் விஜய் என்பவர் U2 Brutus என்ற யூ டியூப் சேனல் மூலம் சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தி அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனைக் கண்டித்தும், சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவம் குறித்து அவதூறான கருத்தைப் பரப்பிய மைனர் விஜயை கைது செய்யக் கோரியும் வலியுறுத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் சிதம்பரத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவம்

சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவம்

சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தியதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையைப் பின்பற்றும் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிற மதங்களை, பிறருடைய மத நம்பிக்கைகளை இழிவுபடுத்திப் பேசுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. எந்த மதத்தை இழிவுபடுத்தி பேசினாலும் அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கும்.
முதலமைச்சர் என்பவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானவர் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அண்ணா வழி

அண்ணா வழி

பேரறிஞர் அண்ணா • அவர்களின் வழியில் செயல்படுகின்ற ஆட்சி என்று அடிக்கடி சொல்லும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தி.மு.க. கடவுளுக்கு எதிரான கட்சி அல்ல என்று அடிக்கடி சொல்லும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தி.மு.க.வில் இருப்பவர்களில் 90 விழுக்காடு பேர் இந்துக்கள் என்று கூறும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்துக் கடவுளை கொச்சைப்படுத்தி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை அதிர்ச்சியோடும், வேதனையோடும் மக்கள் பார்க்கிறார்கள். பிற மதங்களையோ அல்லது பிற மதக் கடவுள்களையோ யார் பழித்துப் பேசினாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்பது சட்டம் ஒழுங்கை சீரழிக்கவும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும், மத மோதல்களை உருவாக்கவும் வழிவகுக்கும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உண்டு.

U2 Brutus தடை

U2 Brutus தடை

எனவே, இந்துக் கடவுளை இழிவுபடுத்தி, இந்துக்களின் மனதை புண்படுத்தி, தரக் குறைவாகவும் நாகரிகமற்ற முறையிலும் இந்துத் தெய்வத்தை விமர்சித்துள்ள மேற்படி U2 Brutus என்ற யூ டியூப் சேனலை உடனடியாகத் தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், இதற்குக் காரணமானவர்கள்மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+