Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரியாக தீர்ப்பு நாளில்.. எடப்பாடிக்கு ஏற்பட்ட பூச்சிக்கடி.. வெளியே போகாமல் ஆலோசனை.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அலர்ஜி பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

    OPS EPSஅ சேர்த்துக்கணுமா? வேண்டாமா? ADMK தொண்டன் குரல்!

    அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கு இந்த முறை தனி நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இதில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு முக்கியமான பல வாதங்களை வைத்தது.

    எடப்பாடி தரப்பும் தீவிரமான வாதங்களை வழக்கில் வைத்தது. இந்த நிலையில் சற்று நேரத்தில் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

    அதிமுக பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சென்னை வீட்டில் ஆட்கள் அதிகமாக இல்லை. அவரின் வீட்டில் நிர்வாகிகள் தினமும் வர கூடிய அதே எண்ணிக்கையில் தான் வந்துள்ளனர். கூடுதலாக நிர்வாகிகள் அவரின் வீட்டிற்கு வரவில்லை. இன்று காலை மட்டும் எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டில் ஆலோசனை செய்தார். தீர்ப்பு எப்படி வரும் என்பது தொடர்பாக தனக்கு நெருக்கமான நிர்வாகிகளுடன் மட்டும் எடப்பாடி பேசினார்.

    ஆலோசனை

    ஆலோசனை

    இந்த ஆலோசனையில் தீர்ப்பு எதிராக வந்தால் என்ன செய்யலாம் என்று எடப்பாடி ஆலோசனை செய்தார். தீர்ப்பு எதிராக வந்தால் அடுத்து வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக பொதுக்குழு செல்லாது என்பதால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை என்று ஆகிவிடும். இதனால் அவர் இதுவரை எடுத்த முடிவுகளும் செல்லாது என்று ஆகிவிடும். இதனால் எடப்பாடி பழனிசாமி அதை பற்றி ஆலோசனை செய்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    அதே சமயம் எடப்பாடி பழனிசாமி இன்று உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு பூச்சிக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அலர்ஜி ஏற்பட்டு உடலில் தடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் வீட்டிலேயே மருத்துவம் எடுத்துக்கொண்டு வருகிறார். உடலில் பல்வேறு இடங்களில் தடிப்புகள் அவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அவர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஏன் செல்லவில்லை

    ஏன் செல்லவில்லை

    அதிமுக நிர்வாகிகளை சந்திக்க வேண்டும். தீர்ப்பு பற்றி பேச வேண்டும் என்பதற்காக எடப்பாடி வெளியே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. தீர்ப்பு வரும் நேரத்தில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்ய வேண்டும். இப்போது போய் மருத்துவமனையில் இருந்தால் சரியாக இருக்காது என்று எடப்பாடி கருதியதாக கூறப்படுகிறது. இன்று தீர்ப்பு வந்த பின் வீட்டிற்கு பல நிர்வாகிகள் வருவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+