சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வலிமை" அடைந்த தாழ்வு பகுதி.. வானிலையில் நடந்த மாற்றம்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும், வங்கக்கடலில் காற்று எப்படி இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்து கொண்டு இருக்கிறது. தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

ஆனால் இது தமிழ்நாட்டிற்கு மழையை கொடுப்பது சந்தேகம்தான். இந்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மழை மேகங்களை மேற்கு பள்ளத்தாக்கு காற்று இழுத்து சென்றுவிடுகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு மழை பெய்வது இல்லை.

ஆஹா.. புரட்டிப்போடும் புயல்.. தூத்துக்குடியில் 30 அடி உள்வாங்கிய கடல்.. அதிர்ச்சியடைந்த மக்கள்ஆஹா.. புரட்டிப்போடும் புயல்.. தூத்துக்குடியில் 30 அடி உள்வாங்கிய கடல்.. அதிர்ச்சியடைந்த மக்கள்

தாழ்வு மண்டலம்

தாழ்வு மண்டலம்

இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும். தமிழ்நாட்டில் வரும் நாட்களில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யவே வாய்ப்புகள் உள்ளன. இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை நிலவரம்

மழை நிலவரம்


மற்றபடி அடுத்த 2 நாட்கள் பெரும்பாலான தமிழ்நாடு பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும். வரும் 24ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் 25ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

 நிலவரம் என்ன?

நிலவரம் என்ன?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு பின்பே ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் என்று அளவில் இருக்கும். அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் இன்று பெரிதாக எங்கும் மழை பெய்யாது.

கடல்

கடல்

இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் இந்த நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

English summary
What is the Tamil Nadu Weather like today as North East monsoon comes close to an end?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X