சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீபாவளி மறுநாள் வானில் அதிசயம்.. தமிழ்நாட்டில் சூரிய கிரகணம் பார்க்க ஆசையா? இதை நோட் பண்ணுங்க

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 25 ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெரிய உள்ள நிலையில், தமிழ்நாட்டில் எந்தெந்த நகரங்களில் எல்லாம் இது தெரியும் என்பதை பார்க்கலாம்.

நாளை அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியா உட்பட உலகம் முழுவதும் வாழும் இந்து மக்களால் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது.

இதற்க்கு மக்கள் இப்போதே தயாராகிவிட்டனர். இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 25 ஆம் தேதி வானில் அரிய நிகழ்வான சூரிய கிரகணம் தென்பட உள்ளது.

சூரிய கிரகணம்..தமிழ்நாட்டில் மூடப்படாத திருவண்ணாமலை கோவில்.. நடை திறந்திருக்க காரணம் இதுதானாம்! சூரிய கிரகணம்..தமிழ்நாட்டில் மூடப்படாத திருவண்ணாமலை கோவில்.. நடை திறந்திருக்க காரணம் இதுதானாம்!

நாடுகள்

நாடுகள்

இந்த சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நாடுகள், மேற்கு ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், வடக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் தென்பட உள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்படும்.

 எந்த நேரம்?

எந்த நேரம்?

இந்த சூரிய கிரகணத்துக்கு மொத்தம் கட்டங்கள் இருக்கின்றன. தொடக்கம், உச்சக்கட்டம், முடிவு என மூன்று கட்டங்களில் சூரிய கிரகணம் தென்படும். ஐஸ்லாந்து நாட்டில் அக்டோபர் 15 ஆம் தேதி பிற்பகல் 2:29 மணிக்கு தென்படும் இந்த சூரிய கிரகணம் மாலை 6:32 மணியளவில் அரபிக்கடலில் மறைகிறது.

இந்தியா

இந்தியா

இந்த சூரிய கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையை ரஷியாவில் 4:39 மணியளவில் காணலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் மாலை 5:30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளிக்க முடியும்.

 அதிக நேரம்

அதிக நேரம்

இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும். அதிகபட்சமாக குஜராத் மாநில துவாரகாவிலும், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் குறைந்தபட்சமாக 12 நிமிடங்களும் இந்த சூரிய கிரகணம் தென்படும். புதுடெல்லி, மும்பை, அஹமதாபாத், சூரத், புனே, ஜெய்பூ, இந்தூர், தானே, போபால், லூதியானா, ஆக்ரா, சண்டிகர், உஜ்ஜெய்ன், மதுரா, போர்பந்தர், காந்திநகர், சில்வாசா, பனாஜி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக இந்த சூரிய கிரகணம் தென்படும்.

 தமிழ்நாடு

தமிழ்நாடு

சென்னை, கோவை, ஓட்டி, ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும். ஆய்ஜோல், திப்ருகர், இம்பால், இடாநகர், கோஹிமா, சில்சார், அந்தமான் மற்றும் நிகாபார் தீவுகளில் இது தென்படாது.

English summary
The day after Diwali solar eclipse on October 25 is visible in many countries around the world. Let's see which cities in Tamil Nadu we will see it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X