இது லிஸ்ட்லயே இல்லையே.. "அவருக்கு" புது பொறுப்பாமே.. டக்கென மனம் மாறிய முதல்வர்.. அப்ப உதயநிதி?
உதயநிதிக்கு விரைவில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிறார்கள்
சென்னை: திமுகவுக்குள் இரண்டு விதமான செய்திகள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. இதனால் அறிவாலயமே பரபரபத்து காணப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், தன்னை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சாதியை சொல்லி திட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவும் வைரலானது... இந்த வீடியோவை முன்னிறுத்தி, ராஜகண்ணப்பனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் வெடித்தன.

வீடியோ
சர்ச்சை வீடியோ வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக திடீரென மாற்றப்பட்டார்... அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இலாகா ஒதுக்கப்பட்டது... பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கரிடம் போக்குவரத்துத் துறையும் உடனடியாக ஒதுக்கப்பட்டது...

என்ன காரணம்?
இந்த இலாகா மாற்றமானது மேலும் சில அதிருப்திகளைதான் பெற்று வருகிறது.. அதிமுக, உட்பட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்ணப்பன்மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விகளைதான் கேட்டுக் கொண்டிருக்கின்றன.. அதேசமயம், இந்த இலாகா மாற்றம் தொடர்பாகவும், புதிய அமைச்சரவை குறித்தும் சில தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. அதுதான் திமுகவில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

முதல்வர்
அதாவது, சாதி பெயரை சொல்லி கண்ணப்பன் திட்டிய வீடியோ வெளியானதுமே, துபாயில் இருந்த ஸ்டாலினை அது கொதிப்படைய வைத்துவிட்டதாம்.. அவருடைய பதவியை பறித்து விடுங்கள் என்று முதல்வருக்கு உடனிருந்தவர்கள் வலியுறுத்தியும் உள்ளனர்.. ஆனால் முதல்வர்தான் மறுத்துவிட்டாராம்.. அதேசமயம், போக்குவரத்து துறையில் இருந்து கண்ணப்பனை நீக்கியே ஆக வேண்டும் என்றும் முடிவு எடுத்துவிட்டாராம்.. அதுமட்டுமல்ல, போக்குவரத்து துறை பொறுப்புக்கு சீனியர் அமைச்சரான ஐ. பெரியசாமியை நியமிக்கலாம் என்றும் யோசித்துள்ளார்..

பெரியசாமி
காரணம், கூட்டுறவு துறையில் பெரியசாமிக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை என்றும், ஆரம்பத்தில் இருந்தே போக்குவரத்து துறையை ஒதுக்கினால் நன்றாக இருக்கும் என்றும் விரும்பி உள்ளார்.. அவர் விருப்பத்தை அறிந்த முதல்வர், இந்த முறை பெரியசாமிக்கே போக்குவரத்து துறையை ஒதுக்கலாம் என்று நினைத்துள்ளார்.. ஆனால், ராஜகண்ணப்பனுக்கு கூட்டுறவு துறையை ஒதுக்கினால் மேலும் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என்பதால்தான், சிவசங்கர் சாய்ஸ் அடிபட்டதாம்.

ராஜ கண்ணப்பன்
இருந்தாலும், கூடிய சீக்கிரம் ஐ.பெரியசாமிக்கு முக்கிய இலாகா கிடைக்கும் என்கிறார்கள்.. அதேபோல, இன்னொரு தகவலும் வட்டமடிக்கிறது.. உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு என்ற பேச்சு நீண்ட நாட்களாகவே எழுந்து வருகிறது.. ஆனால், அமைச்சரவையில் உள்ள ஒருவருக்கு பதிலாகத்தான் உதயநிதிக்கு அந்த இலாகாவை ஒதுக்க முடியும்.. அப்படியானால் யாரை நீக்குவது என்ற குழப்பமும் மேலிடத்தில் சூழ்ந்துள்ளது.. அளவுக்கு அதிகமான விமர்சனங்கள், புகார்கள், குற்றச்சாட்டுகள் வந்துள்ள சில சீனியர் அமைச்சர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது..

உதயநிதி
ஒருவேளை கண்ணப்பனை போலவே இவர்களுக்கும் கடைசி சான்ஸ் முதல்வர் தரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. அப்படியானால், வேறு யாராவது ஒருவர் மனமுவந்து பதவியை ராஜினாமா செய்தால், அந்த அமைச்சர் பொறுப்பை உதயநிதிக்கு ஒதுக்கவும் முடிவாகி உள்ளதாம்.. இல்லாவிட்டால், ராஜகண்ணப்பனே ஒதுக்கப்பட்ட இலாகா பிடிக்காமல், தானாக முன்வந்து ராஜினாமா செய்தால், இன்னும் வேலை சுலபம் என்றும் கணக்கு போடப்படுகிறதாம்.. எதுவானாலும், அமைச்சரவையில் லேசான மாற்றம் சிறிது நாளில் ஏற்படக்கூடும் என்கிறார்கள்..!












Click it and Unblock the Notifications