"ஏழுமலை".. காவியும் + அறிவாலயமும்.. ஸ்டாலினின் "ராஜதந்திரம்".. ரூட்டை எடுத்த திமுக.. கலங்கும் அதிமுக
தமிழக பாஜகவுக்கு திமுக முக்கியத்துவம் தர காரணம் ஏன் என தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் விவகாரம் அனலடித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயம் அரசியல் களத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது..!
திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்ற முழக்கத்தோடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாஜக தீவிரத்தை முன்னெடுத்தது..
இதற்காக பாஜக மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் சற்று அதிகம் என்றே சொல்லலாம் ஆரம்பத்தில் அதிமுக இதை பெரிதுபடுத்தவில்லை..

ஓவர்டேக்
திமுகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பாஜக, தங்களையே ஓவர்டேக் செய்துவிட்டதே என்று அதிமுக நினைத்துள்ளது.. அதனால்தான் இரண்டாம் கட்ட தலைவர்கள், தமிழக பாஜகவுக்கு பதிலடிகளை தர ஆரம்பித்தனர்.. அப்போதும் பாஜக தன் அதிரடியை குறைத்து கொள்ளவில்லை.. ஒருகட்டத்தில் எடப்பாடியே, இதில் களமிறங்கினார்.. சில தினங்களுக்கு முன்பு, தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்து பேசினார்.. நலம் விசாரித்தார்..

எடப்பாடி பழனிசாமி
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் வழிமுறைகளில் திட்டமிட்டு திமுக அரசு மூக்கை நுழைப்பது கண்டிக்கத்தக்கது.. யாரும் தலையிடக்கூடாது.. யார் தவறு செய்தாலும் சரி அதற்கு இறைவன் தக்க பதிலடி கொடுப்பார்" என்று கோவில் வாசலில் நின்று எடப்பாடி பழனிசாமி சாபம் விட்டு சென்றார்.. ஆதீனத்துக்கு பக்கபலமாக தொடர்ந்து பாஜக இருந்து வந்த நிலையில், நேரடியாகவே ஆதீனத்தை எடப்பாடி சென்று சந்தித்து, பாஜகவுக்கு ஷாக் தந்திருந்தார். ஆனாலும் அதிமுகவையும் பலவீனப்படுத்தி, மட்டுப்படுத்தி வரும் போக்கும் பாஜகவில் தொடரவே செய்கிறது..

என்ட்ரி
பாஜக - அதிமுக உறவு இப்படி இருந்து வரும் நிலையில்தான், திமுக என்ட்ரி தருகிறது.. ஆரம்பத்தில் பாஜகவை கண்டுகொள்ளாமல் நகர்ந்து கொண்டிருந்த திமுகவின் அரசியல், சமீபகாலமாக, பாஜகவுக்கு பதிலளிக்கும் நிலைமைக்கு ஆளாகி உள்ளது.. இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது.. பாஜகவின் குற்றச்சாட்டுகள் எதுவானாலும் அதை திமுக தம்பிகள் அசால்ட்டாக எடுத்து கொள்ளக்கூடாது என்று மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பலமுறை எச்சரித்து வருகிறார் என்றாலும், பாஜகவின் எல்லைமீறிய செயல்பாடுகள் திமுகவுக்கே எரிச்சலை கிளப்பி விட்டதாம்.

சீனியர்கள்
அதிலும் ஊழல் புகார்களை லிஸ்ட் போட்டு அண்ணாமலை காட்டுவார் என்று திமுகவே எதிர்பார்க்கவில்லை.. அண்ணாமலைக்கு பதில் சொல்லாமல், அமைதியாகவே ஒதுங்கி இருந்தால், அது குற்றத்தை ஒப்புக் கொண்டதுபோல் ஆகிவிடும் என்பதாலேயே, திமுக சீனியர்கள் பதில் சொல்ல ஆரம்பித்தனர்.. பிறகு முதல்வர் ஸ்டாலினே தமிழக பாஜகவுக்கு பதிலடி தர துவங்கினார். இதற்கு இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது..

காம்ரெட்டுகள்
வரப்போகும் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி பலமாக இருக்க வாய்ப்புள்ளது.. திமுக கூட்டணியில் இருந்து, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என யார் வேண்டுமானாலும் அங்கு சென்று கூட்டணி அமைக்கவும் சாத்தியம் உள்ளதாக தெரிகிறது.. அப்படி பலமான கூட்டணி எதுவும் அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அதிமுகவை மட்டுப்படுத்த திமுகவே தயாராகிவிட்டதாக சொல்கிறார்கள்.. அதாவது, பிரதான எதிர்க்கட்சி அதிமுக என்றே இருந்து வரும் நிலையில், பாஜகவுக்கு பதில் அளித்து, தேவையில்லாத முக்கியத்துவத்தை திமுக மேலிடம் தர ஆரம்பித்துள்ளதாம்.

ஏழுமலை
சில தினங்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை பெயரை "ஏழுமலை" என்று தவறுதலாக கூறியிருந்தார்.. ஒரு மாநில கட்சி தலைவர், அதுவும் தங்கள் கூட்டணியில் உள்ளவரின் பெயரை, ஏழுமலை என்று எடப்பாடி உச்சரிக்க காரணம், அண்ணாமலையின் எழுச்சி எடப்பாடிக்கே தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்பதால்தான், வேண்டுமென்றே சொன்னார் என்கிறது ஒரு தரப்பு.. ஆனால், எடப்பாடி பழனிசாமி பேட்டி தந்த அதே நாள், முதல்வர் ஸ்டாலின், எதிர்தரப்பின் அண்ணாமலை பெயரை மிக சரியாகவே குறிப்பிட்டு, பாஜகவுக்கு பதிலடி தந்திருந்தார்.

சறுக்கல்
பாஜகவுக்கு முக்கியத்துவம் தந்து, பதிலடி தருவதால், அதன்மூலம் அதிமுகவை மட்டுப்படுத்தும் திமுகவின் ராஜதந்திரம் இது என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, பாஜகவுக்கு இப்படி பதிலடி தருவதால் அது தங்களுக்குதான் சாதகமாக அமையும், பாஜக எப்படியும் சறுக்கலை தானாகவே சந்திக்கும் என்பதே திமுகவின் புதுகணக்காம்.. அதனால்தான், அண்ணாமலைக்கு, திமுக தலைவர்கள் தொடர்ந்து பதிலடிகளை தர துவங்கிவிட்டார்கள் என்கிறார்கள்.. ஆகமொத்தம், தாங்கள்தான் எதிர்க்கட்சி என்பதை நிலைநிறுத்த, அதிமுகதான் இனிமேல்தான் நிறைய மெனக்கெட வேண்டி இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!
-
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்!











Click it and Unblock the Notifications