சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"துரோகி".. வார்த்தையை விட்ட மந்திரி.. நான் ஒரே கட்சி.. நீங்க பேசலாமா? ஒரு பிடி பிடித்த எடப்பாடி!

Google Oneindia Tamil News

சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜி, எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகம் செய்து முதலமைச்சர் ஆனவர் என விமர்சித்த நிலையில், அவரை ரவுண்டு கட்டி ஒரு பிடி பிடித்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

போகிற கட்சிக்கெல்லாம் துரோகம் செய்தவர் செந்தில் பாலாஜி என்றும், அவர் துரோகத்தைப் பற்றி பேசக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி காட்டமாகக் கூறினார்.

 ஓ.. எடப்பாடி அதை சொன்னதுமே, உடனே வந்த திமுக ராஜீவ் காந்தி.. பின்னாடியே பாஜக நாராயணன்.. நடுவுல திருமா ஓ.. எடப்பாடி அதை சொன்னதுமே, உடனே வந்த திமுக ராஜீவ் காந்தி.. பின்னாடியே பாஜக நாராயணன்.. நடுவுல திருமா

 அரைவேக்காடு

அரைவேக்காடு

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருந்தார். கூவத்தூரில் முட்டி போட்டு, நம்பிக்கை துரோகத்தால் முதலமைச்சர் ஆனவர்களால் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அரைவேக்காட்டுத் தனமாக நிதிநிலை அறிக்கை வாசித்து முடிக்கும் முன்பே வெளியில் வந்து விமர்சித்துள்ளனர் என்று கடுமையாக விளாசி இருந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

ஒரு பிடி பிடித்த எடப்பாடி

ஒரு பிடி பிடித்த எடப்பாடி

இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுத்து ஒரு பிடி பிடித்தார். துரோகத்தின் அடையாளமே செந்தில் பாலாஜி தான். எத்தனை கட்சிக்கு அவர் போய் சேர்ந்திருக்கிறார். ஒரு கட்சியா.. இரண்டு கட்சியா.. என காட்டமாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

நான் 1974ல்

நான் 1974ல்

செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எடப்பாடி பழனிசாமி துரோகி எனச் சொல்லியுள்ளார். துரோகிக்கு அடையாளம் செந்தில் பாலாஜி தான். செந்தில் பாலாஜி எத்தனை கட்சிகளுக்கு சென்றுள்ளார்? ஒரு கட்சி இரண்டு கட்சிகளுக்கா சென்று வந்துள்ளார். போகின்ற கட்சிகளுக்கு எல்லாம் துரோகம் இழைத்தவர் செந்தில்பாலாஜி. துரோகத்தை பற்றி அவர் பேசக்கூடாது. 1974ல் அதிமுகவில் சேர்ந்தேன். இன்று வரை அதிமுகவிலேயே இருக்கிறேன். ஆனால், செந்தில் பாலாஜி எத்தனை கட்சிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

குறுக்கு வழியில்

குறுக்கு வழியில்

துரோகத்தின் மொத்த வடிவமே செந்தில் பாலாஜி தான். திமுகவில் எவ்வளவு சீனியர்கள் இருக்கிறார்கள். திமுகவுக்கு வந்து 5 வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் அவர் பேட்டி கொடுக்கிறார். திமுகவில் ஆட்களே இல்லையா? திமுகவில் 50 முதல் 60 வருடங்களாக முன் வரிசையில் இருந்தவர்கள், திமுகவிற்காக உழைத்தவர்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு துரோகம் செய்து குறுக்கு வழியில் அவர்தான் வந்துள்ளார். நாங்கள் யாரும் குறுக்கு வழியில் வரவில்லை. அவர் துரோகத்தை பற்றி பேசக்கூடாது'என்று விளாசி இருக்கிறார் ஈபிஎஸ். ஈபிஎஸ் - செந்தில் பாலாஜி இடையேயான இந்த வார்த்தை மோதல் இரு கட்சியினர் மத்தியிலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

English summary
When Minister Senthil Balaji criticized Edappadi Palaniswami for betraying, Opposition Leader Edappadi Palaniswami rounded him up and retaliated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X