ஆள் பார்த்து போடுங்க.. இப்பவே உள்ளடி வேலை கையை மீறி போகுதே.. ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா?
சென்னை: பாளையங்கோட்டையின் சிட்டிங் எம்எல்ஏ அப்துல்வஹாபிற்கு எதிராக திமுக முன்னாள் கவுன்சிலர் பவுல்ராஜ் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மேலும், அப்துல் வஹாபிற்கு ஆப்பு வைப்பதற்காக தவகெவுடன் கூட்டணி வைப்பதற்கும் பவுல்ராஜ் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாவதால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் அப்துல் வஹாப்.
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1977ம் ஆண்டு முதல் 2021 வரை நடைபெற்ற 11 தேர்தல்களில் 8 முறை திமுக வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அளவிற்கு திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருக்கிறது பாளையங்கோட்டை. அப்படிப்பட்ட பாளையங்கோட்டை தொகுதியில் இப்போது திமுக வெற்றி பெறுமா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளதாம். அதற்கு காரணம் மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் பவுல்ராஜ் என்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.

தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவான அப்துல் வஹாப் மீண்டும் பாளையங்கோட்டையில் சீட் கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு, அமைச்சர் கே.என்.நேரு ஃபுல் சப்போர்ட். அதனால் தனக்கு எப்படியும் வாய்ப்பு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் வஹாப். சீட் ரேசில் முன்னாள் அமைச்சர் மைதீன் கான், ராஜா முகமது போன்றவர்களை அப்துல் வஹாப்பால் ஓரம் கட்டிவிட முடியும். ஆனால் வெற்றி பெற்று விட முடியுமா என கங்கணம் கட்டி வருகிறாராம் முன்னாள் கவுன்சிலர் பவுல்ராஜ்.
யார் இந்த பவுல்ராஜ்?
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயராக சரவணன் இருந்த போது, திமுக கவுன்சிலராக இருந்தும், மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி்யவர் தான் இந்த பவுல்ராஜ். இதனால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் பவுல்ராஜ் மன்னிப்பு கடிதம் கொடுத்திருந்தால் மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டிருப்பார். ஆனால் மன்னிப்பு கடிதம் கொடுக்காததோடு, தற்போது திமுகவிற்கு எதிராகவே வேலை பார்த்து வருகிறாராம் இவர். குறிப்பாக பாளையங்கோட்டை தொகுதியில் வரும் தேர்தலில் பவுல்ராஜட் சுயேட்சையாக போட்டியிடவும் தயாராகி வருவதாகவும்ட சொல்லப்படுகிறது. இதற்காக தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் விளம்பரமும் செய்து வருகிறார். Vote for the person... Not for the party..என்ற கேப்சனோடு இவரின் ஃபேஸ்புக் பதிவால் கடுப்பில் இருக்கிறதாம் திருநெல்வேலி திமுக.
இன்னும் ஒரு படி மேலே போய் திமுகவிற்கு குடைச்சல் கொடுக்க தவெகவுடன் கைகோர்க்கவும் பவுல்ராஜ் தயாராகி வருவதாக செய்திகள் உலவுகின்றன. இதனால் கலக்கத்தில் இருப்பது என்னவோ அப்துல் வாஹாப்தான் என்கிறார்கள் உடன்பிறப்புகள். இந்த தலைவலி போதாதென்று இப்போது அமலாக்கத்துறையால் வேறு அப்செட்டில் இருக்கிறாராம் அப்துல் வஹாப். நகராட்சி நிர்வாக துறையில் டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் ரூ.1,020 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமைச்சர் கே.என் நேரு மீது அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியுள்ளது.
அதிமுக எம்பி இன்பதுரை தொடர்ந்த வழக்கு
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அதிமுக எம்பி இன்பதுரை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நேரு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்பத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதனால் கே.என்.நேருவே அப்செட்டில் இருக்கிறார். இந்நிலையில் அமைச்சர் நேரு மீது குற்றமி் சுமத்தி அமலாக்கத்துறை வெளியிட்ட ஆதாரங்களில் பாளைங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வாஹாப் தொடர்பான பணவசூல் ஆதாரமும் இருக்கின்றதாம். அதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக கே.என்.நேருவின் பெயரைச்சொல்லி அப்துல் வஹாப் நகராட்சி அதிகாரிகள் 43 பேரிடம் தலா ஒருலட்சம் என 43 லட்சம் ரூபாய் வசூல் செய்ததற்காக ஆதாரம் தான் அதுவாம். இந்த ஆதாரம் இப்போது பாளையங்கோட்டை வட்டாரத்தில் வேகமாக பரப்பப்டடு வருகிறதாம். இதனாலும், அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறராம் அப்துல் வஹாப்.
ஒரு தொகுதியில் ஒருவருக்கு, சீட் கிடைத்து, அதன் பிறகு போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவதுதான் ஒருவருக்கு சவாலான வேலை என்று தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு அப்துல் வாஹிபிற்கு சீட் கிடைப்பதற்கே எத்தனை இடைஞ்சல் என நொந்து கொள்கிறார்கள் அவரின் ஆதரவு உடன் பிறப்புகள்.... அட.... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....
- சிறப்பு நிருபர்
-
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
காங்கிரஸ்-க்கு குட்பை.. விலகுவதாக அறிவித்தார் அமெரிக்கை நாராயணன்.. கட்சி மீது கடும் அதிருப்தி -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
அவசரமாக திரும்பி வந்த அண்ணாமலை.. சென்னையில் மோடி.. இன்று பாஜகவின் கடைசி நேர ஆபரேஷன்.. யாரந்த 16 பேர் -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி !











Click it and Unblock the Notifications