சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சுகாதார துறை"க்கு சிறப்பு அதிகாரி ஏன்.. யார் இந்த செந்தில்குமார்?.. பரபரக்கும் கோட்டை

சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதவி குறித்த செய்தி ஒன்று கசிந்து வருகிறது.. கொரோனா பரபரப்புக்கு நடுவில், இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது.

வழக்கமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அரசு அதிகாரிகளும் மாற்றம் செய்யப்படுவது இயல்புதான்.. காரணம், தங்கள் ஆட்சிக்கு சாதகமானவர்களை நியமித்தால், தேவையில்லாத பல சிக்கலை தவிர்க்கலாம் என்பதுதான் பொதுவான காரணம்.

அந்த வகையில், தற்போதைய திமுக அரசியல் அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஆனால், சுகாதாரத்துறை செயலாளர் பதவிக்கான நியமனம் மட்டும் நடக்கவில்லை.. தற்போதைய செயலாளர் ராதாகிருஷ்ணனே தொடர்கிறார்.

கொரோனா நோயாளிகள் கருப்பு சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.. ஹர்ஷ் வர்தன் பதிவால் சர்ச்சை கொரோனா நோயாளிகள் கருப்பு சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.. ஹர்ஷ் வர்தன் பதிவால் சர்ச்சை

 பிரச்சனை

பிரச்சனை

திமுக ஆட்சி ஏற்ற சமயம், ஒருவேளை ராதாகிருஷ்ணன் பதவி பறிக்கப்பட்டுவிடுமோ என்று பொதுமக்களேகூட யோசித்தனர்.. ஏனெனில், தற்போதைய கொரோனா பிரச்சனை தடுப்புகளை சிறப்பாக கையாண்டு வருகிறார் ராதாகிருஷ்ணன்.. இவர் ஒரு அருமையான அதிகாரி.. சூப்பராக செயல்படுகிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

சென்ற வருடமாவது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார், சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் பொறுப்பில் இருந்தார்.. இவர்களின் துணையுடன் தொற்று கட்டுப்பாடு முடக்கப்பட்டது.. ஆனால், இந்த முறை அப்படி இல்லை.. 2வது பரவல் இங்கு பரவ தொடங்கியதுமே காபந்து அரசு வந்துவிட்டது.. எனவே, அதிகாரிகள்தான் அரசை முன்னெடுத்து சென்றனர்.. இவர்கள்தான் மக்களை காத்தனர்.

காபந்து

காபந்து

லாக்டவுன் போடுவதா? கட்டுப்பாடுகளை விதிப்பதா? அப்படி முழு லாக்டவுன் போட்டுவிட்டால், நிதி நிலைமை என்னாவது? என்பது குறித்து கூடி கூடி விவாதித்தனர்.. அந்த வகையில் ராதாகிருஷ்ணன் தலைமையில் இவை அனைத்துமே நடந்தது.. சுற்றி சுழன்று பம்பரமாக வேலை பார்த்தார்.. தேர்தல் ரிசல்ட் வந்தபிறகுதான் ஸ்டாலினிடம் ஆலோசனை கேட்டு நடக்கப்பட்டது.

 கோர்ட் பாராட்டு

கோர்ட் பாராட்டு

அதனால்தான், தற்போதைய கொரோனா தொற்று பாதிப்பு, விளைவுகள், தாக்கங்கள் குறித்து முழுமையாக அறிந்த ராதாகிருஷ்ணனை, திமுக அரசு மாற்றம் செய்யவில்லை.. ஸ்டாலினின் இந்த செயல்பாட்டுக்கு சென்னை ஹைகோர்ட்டும் பாராட்டி இருந்தது.. புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அரசு, சுகாதாரத்துறைச் செயலாளரை மாற்றாமல் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதாக கூறி, தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் திருப்தி தெரிவித்திருந்தனர்.

செயலாளர்

செயலாளர்

இந்நிலைமையில்தான், கடந்த வாரம் அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதில், சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரியாக செந்தில்குமாரரை நியமித்துள்ளது.. இவர்தான் கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வரின் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர்.. கவர்னர் அலுவலகம், ஐஏஎஸ் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு போன்றவைகளை கவனித்து வந்தவர்..

 சுகாதார செயலாளர்

சுகாதார செயலாளர்

இவரை அடுத்த சுகாதார செயலாளராக மாற்றம் செய்யவிருப்பதாக ஒரு தகவல் வட்டமடிக்கிறது.. இந்த கொரோனா பிரச்சனை ஓரளவு முடிந்ததும், ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக இவரை சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்க ஒரு யோசனை திமுகவுக்கு இருக்கிறதாம்.. இப்போது சிறப்பு அதிகாரியாக வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தற்காலிகம் என்றும், 2 மாசத்திற்கு பிறகு, அநேகமாக இவருக்கு, சுகாதாரத்துறை செயலாளர் பதவி தரப்படலாம் என்றும் கூறுகிறார்கள்.

 நன்மதிப்பு

நன்மதிப்பு

இதில், இன்னொரு விஷயமும் கசிகிறது.. இந்த பதவிக்கு இவரை சிபாரிசு செய்ததே உதயச்சந்திரன்தானாம்.. இப்படி ஒரு தகவல் கோட்டை வட்டாரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. எப்படியோ, ராதாகிருஷ்ணன் இந்த நிமிடம் வரை மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார்.. சுனாமி வந்த சமயத்தில்கூட இவரது செயல்பாடுகளை பார்த்து பொதுமக்களும், கலெக்டர்களும் பாராட்டி தள்ளினார்கள்.,.

 விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

அவ்வளவு ஏன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் இவரும் 6 வருஷம் ஒன்றாகத்தான் பணியாற்றினார்கள்.. ஆனால், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அபரிமிதமாக வந்தநிலையில், ராதாகிருஷ்ணன் மீது ஒரு சின்ன புகார்கூட எழவில்லை என்பதே இவரது நேர்மைக்கு உதாரணம். இந்த பொறுப்பில் எவ்வளவு ராதாகிருஷ்ணன் செயல்படுவாரா, அவ்வளவு நாளும் சீரும் சிறப்புமாகவே செயல்படுவார் என்பது உறுதி..!

English summary
Why a special officer for the TN Health department
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X