"கைமீற கூடாது".. பிடிஆர் காரில் செருப்பு வீச்சு! நிதானமாக "டீல்" செய்த திமுக! காரணமே வேறயாம்
சென்னை: மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளும் திமுக அரசு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் நிதானமாக கையாண்டது. சட்டத்தை கையில் எடுக்காமல் சட்டப்படி இந்த விவகாரத்தை ஆளும் திமுக அரசு கையாண்டது.
திமுகவினர் சிலரே கூட.. ஒரு காலத்தில் எப்படி இருந்த திமுக. நிர்வாகிகள் மீது கை வைக்கவே பயப்படுவார்கள். ஆனால் இப்போது அமைச்சர் கார் மீது செருப்பு வீசுகிறார்கள்.
ஆனால் நாம் அமைதியாக இருக்கிறோம் என்று திமுகவினர் சிலரும் கூட கமெண்ட் அடித்து இருந்தனர். ஆனால் ஆளும் திமுக அரசோ வேறு சில காரணங்களுக்காக இந்த விவகாரத்தில் அமைதியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
கோட்டை வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும், அமைச்சரவையில் இருப்பவர்களுக்கும் தெரிந்தே இந்த விவகாரத்தில் ஆளும் திமுக "அத்துமீறி" செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.

என்ன நடந்தது
இந்த விவகாரம் நடந்ததும்.. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பிடிஆருக்கு ஆதரவாக பேசினார்கள். இன்னொரு பக்கம் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் இந்த சம்பவத்தை கண்டித்து பேசினார். முதல்வர் ஸ்டாலின் மட்டும் கருத்து தெரிவிக்காமல் இதில் அமைதி காத்தார். சரியாக ஒரு நாளுக்கு பின்பாக இந்த விவகாரத்தில் பாஜகவை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். மற்றபடி இந்த விவகாரத்தில் சட்டப்படி மட்டுமே ஆளும் திமுக நடந்து கொண்டது.

சட்டப்படி
அதாவது தவறு செய்த 6 பேரை கைது செய்தது. இவர்களை கோர்ட் முன் ஆஜர் செய்து ரிமாண்ட் செய்தது. மதுரையில் சிறு சிறு போராட்டங்கள் செய்யப்பட்டன. ஆனாலும் எங்கும் கலவரம் வெடிக்காமல் பார்த்துக்கொண்டது. இந்த விவகாரம் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாறாமல் பார்த்துக்கொண்டது. ஆளும் திமுஜே அரசு இந்த விவகாரத்தை இப்படி சட்ட ரீதியாக எதிர்கொள்ள இரண்டு காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

காரணம் 1
இந்த விவகாரத்தில் ஆளும் திமுக தொண்டர்கள் போராட்டம் செய்யப்போனால்.. எல்லாமே மாறிவிடும். கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளது. அமைச்சர் காரில் செருப்பு வீசியவர்கள் அந்த நோக்கத்தோடுதான் செருப்பு வீசினார்கள். கலவரம் நடந்தால்.. எல்லா தப்பும் அமைச்சர் மீதுதான் என்பதை போல மாற்றிவிடுவார்கள். அமைச்சர் பிடிஆர் தான் கலவரத்தை தூண்டியதாக மாற்றிவிடுவார்கள். அதை அனுமதிக்க கூடாது. சட்டப்படியே நடப்போம் என்று ஆளும் திமுக இதில் நிதானமாக செயல்பட்டுள்ளது.

கலவரம்
அதாவது கலவரம் மூலம் பாஜக பல மாநிலங்களில் வளர்ந்து உள்ளது. அப்படி நடக்க கூடாது. அதோடு நாம் ரியாக்ட் செய்யாமல் இருந்தாலே போதும். பாஜகதான் தவறு செய்தது என்று மக்களுக்கு தெரிந்துவிடும். நாம் ரியாக்ட் செய்தால் அது வேறு மாதிரி மாறிவிடும் என்று அடக்கி வாசித்து உள்ளது திமுக. இந்த விவகாரத்திற்கு பின் இன்னொரு காரணமும் இருக்கிறதாம். ஆட்சி நம்முடைய கையில்தான் இருக்கிறது. பாஜக தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
Recommended Video

சட்டம்
கலவரம் செய்ய நாம் எதிர்க்கட்சி அல்ல. அதனால் போலீஸ் நடவடிக்கை பாயும் என்பதை "அவர்கள்" உணரட்டும். இப்போ பாருங்க அதிமுக உட்பட எல்லா கட்சிகளும் பாஜகவை விமர்சனம் செய்கிறது. பாஜகவை தனித்து விட இதுவே நல்ல சூழல். தேவையின்றி நாம் ரியாக்ட் செய்து. பின்னர் திமுகவை ரவுடி கட்சி என்று தவறாக பிரச்சாரம் செய்துவிட கூடாது என்று ஆளும் திமுக நினைத்தாக கூறப்படுகிறது. உளவுத்துறை ரிப்போர்ட், அறிவுரை அனைத்தையும் பின்பற்றித்தான் இந்த முடிவை ஆளும் திமுக எடுத்ததாக கூறப்படுகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications