Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பச்சை துரோகி".. டிடிவியை விடுங்க.. சசிகலா பற்றி ஓபிஎஸ் சொன்னதுமே.. குபீர்னு சிரித்த வைத்திலிங்கம்

சசிகலா குறித்து ஓபிஎஸ் சொன்னதுமே விழுந்து விழுந்து சிரித்தார் வைத்திலிங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.. சசிகலா குறித்து ஓபிஎஸ் சொன்ன பதில்தான் அந்த வீடியோவில் அடங்கி உள்ளது.. என்னவா இருக்கும்?
ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.. ஆனால், எடப்பாடி அதை ஏற்கவில்லை.. அப்பீலுக்கு சென்றுள்ள நிலையில், ஓபிஎஸ் மீதான கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்..

Recommended Video

    Eps-க்கு மீண்டும் அழைப்பு விடுத்த OPS *Politics

    இதனால், ஓபிஎஸ் - எடப்பாடி இருவரும் இணைந்து செயல்படுவது கடினம் என்றே தெரிகிறது.. ஆனால், எடப்பாடி இல்லாமல், ஓபிஎஸ்ஸால், அவ்வளவு பெரிய கட்சியை நடத்தவும் முடியாது என்றும் கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

     மோசமான நிலைமை

    மோசமான நிலைமை

    அதேபோல, அவருக்கான ஆதரவும், பலமும் குறைவாக இருப்பதால், எடப்பாடியையே அவர் நம்பியிருக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது... ஆக மொத்தம் இரு தரப்பிலுமே ஈகோ வெடித்து கிளம்பி உள்ளது.. யார் யாருக்கு விட்டுத்தர போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. இதில் ஓபிஎஸ்ஸைவிட எடப்பாடி மிகவும் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.. என்னதான் டெல்லி ஆதரவு ஓபிஎஸ்ஸுக்கு இருந்தாலும், எடப்பாடியை தன்வசம் கொண்டு வர அவரால் முடியாது என்கிறார்கள்.. இதனிடையே, எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டினாலும், நீதிமன்ற உத்தரவுப்படி, ஓபிஎஸ் பங்கேற்காமலும் இருக்க முடியாத சூழல் உள்ளது.

     சசிகலா + பாஜக

    சசிகலா + பாஜக

    கட்சிக்குள் போதுமான பலத்தை ஓபிஎஸ் பெற்றிராவிட்டாலும், சட்டரீதியாக அவர் சரியான பாதையிலேயே செல்வதாக அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.. மேலும், பாஜக + சசிகலா + தினகரன் என ஆதரவையும் பகிரங்கமாகவே தெரிவித்து வருகிறார்.. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓபிஎஸ் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி தந்தார்.. அப்போது, இப்போது சின்ன சின்ன பிரச்சனைகளாலும், எங்களுக்குள் கருத்து வேறுபாட்டாலும் திமுக ஆளும் கட்சியாகும் சூழல் ஏற்பட்டு விட்டது... கருத்து வேறுபாடுகள் நீக்கி விட்டு அதிமுகவினர் ஒன்று பட வேண்டும்.

     டிடிவி சுளீர்

    டிடிவி சுளீர்

    முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்தவர்கள் சசிகலா, டிடிவி தினகரன் உள்பட யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார்.. ஓபிஎஸ் எப்போது வேண்டுமானாலும் சசிகலா பக்கம் தாவக்கூடும் என்பதை கடந்த காலங்களில் தமிழகமே அறிந்த ஒன்றுதான். அதேபோல டிடிவியும், ஒவ்வொரு முறையும் எடப்பாடி பழனிசாமியை மட்டுமே விமர்சித்து வந்தாரே தவிர, ஓபிஎஸ் பற்றி வாயே திறந்ததில்லை.

     பச்சை துரோகி பழனிசாமி

    பச்சை துரோகி பழனிசாமி

    ஒற்றை தலைமை பிரச்சனை வந்தபோதுதான், லேசாக நண்பர் ஓபிஎஸ் என்று மீடியாக்களில் பேச ஆரம்பித்தார் டிடிவி.. அத்துடன், ஓபிஎஸ்ஸுடன்கூட தேவைப்பட்டால் அமமுக இணையுமே தவிர, துரோகி பழனிசாமியுடன் ஒருக்காலும் இணைய முடியாது என்பதையும் திட்டவட்டமாக வெளிப்படுத்தி வந்தார்.. நேற்றைய தினம் ஓபிஎஸ் இப்படி அழைப்பு விடுத்ததுமே, இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உடனடியாக ரியாக்ட் செய்திருந்தார்.. ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.

     உச்சம் சுயநலம்

    உச்சம் சுயநலம்

    அதில், "தீயசக்தியான திமுகவை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே என்று கூறியிருந்தார்.

     தூண் + வளம்

    தூண் + வளம்

    இந்த இணைப்பில் ஓபிஎஸ்ஸுக்கு நிறைய ஆர்வமும் மகிழ்ச்சியும் இருப்பது நேற்றைய தினம் நன்கு வெளிப்பட்டது.. பேட்டியின்போது செய்தியாளர்கள், "சசிகலா, டிடிவி தினகரன் கட்சிக்குள் இருந்தபோதுதானே வெளியேற்றப்பட்டனர் என்று கேட்டனர்.. அதற்கு ஓபிஎஸ், "எங்களை பொறுத்தவரை தலைவருடன் இருந்து, இந்த இயக்கத்திற்காக பாடுபட்டவர்கள் அவர்கள்.. இந்த இயக்கத்தை வளர்க்க ஒத்துழைப்பு தந்தவர்கள்.. அம்மாவுடைய காலத்தில், இந்த இயக்கத்திற்கு வளமாக, தூணாக இருந்து உழைத்தவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை இணைத்துக் கொண்டு, செல்வதே எங்கள் நிலைப்பாடு என்றார்.

     வைத்திலிங்கம்

    வைத்திலிங்கம்

    உடனே செய்தியாளர்கள், "யாராக இருந்தாலும் என்று பொதுவாக சொல்கிறீர்களே, சசிகலா உட்படவா? எல்லாரும் என்று பொதுவாக சொல்றீங்களே, சசிகலா பெயரை சொல்ல ஏன் இப்படி தயங்குறீங்க? என்று கேட்டனர்.. அதற்கு ஓபிஎஸ், ஏங்க, யாராக இருந்தாலும் என்றால், சின்னம்மாவும் அதில் இருக்காங்க, டிடிவி தினகரனும் அதில் இருக்கிறார்.. போதுமா, இப்ப திருப்தியா என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.. ஓபிஎஸ் இப்படி சொன்னதுமே அவரது ஆதரவாளர்கள் கைகளை தட்டி கரகோஷமிட்டனர்.. அதிலும், பக்கத்தில் உட்கார்ந்திருந்த வைத்திலிங்கம் குலுங்கி குலுங்கி நீண்ட நேரம் சிரித்து கொண்டே இருந்தார்.. இந்த குஷிக்கு அர்த்தம் ஓபிஎஸ் தரப்புக்கு மட்டுமே தெரியும் போல..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+