வந்தாச்சு சிற்பி! சிறு வயதில் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை- ஸ்டாலின் அழைப்பு
சென்னை: சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவே சிற்பி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வறுமை, பொருளாதார நிலையே சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபட காரணமாகிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறார் குற்றங்களை தடுக்க தமிழக காவல்துறை சிறப்பாக கண்காணித்து வருகிறது. சிறார் குற்றங்களைத் தடுக்க காவல்துறையும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பல மாணவ மாணவிகள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். சென்னையில் பெருகிவரும் குற்றச்செயல்களைத் தடுக்க மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிறார் குற்றச் செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக் கூடிய சிறுவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும், சென்னையில் 100 மாநகராட்சிப் பள்ளிகளில், தலா 50 மாணவர்களைக் கொண்டு சிற்பி எனும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பள்ளிகளில் என்சிசி போன்று, காவல் துறையினரின் நிகழ்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 8-ம் வகுப்பு முதல் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கென தனி சீருடை வழங்கப்பட்டுள்ளது.

சிற்பி திட்டம் என்றால் என்ன?
பள்ளிகளில் செயல்படும் தேசிய மாணவர் படை போல் காவல் துறையினரின் நிகழ்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 8-ம் வகுப்பு முதல், மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கென தனி சீருடையும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லுதல், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் திறன்களை மேம்படுத்துதல், சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக அவர்களை மாற்றும் வகையில், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து சட்ட கல்வியறிவு பெறச் செய்தல் போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும்.

முதல்வர் ஸ்டாலின் தொடக்கம்
இதுதவிர, காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண், காவல் கரங்கள் உள்ளிட்ட அவசரகால எண்கள் குறித்து மாணவர்களுக்கு அறிவூட்டுவதுடன், அவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார்.

சிறார் குற்றங்களுக்குக் காரணம்
சென்னையில் உள்ள 100 அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சிறுவர்களை இளமைக்காலம் முதலே பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும் சமூக பொறுப்புள்ளவர்களாகவும் மாற்ற இந்த திட்டம் பயன்படும். சிறார் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் தமிழக காவல்துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சிறார் குற்றச்செயல்களில் ஈடுபட காரணம் குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவுதான். போதிய வருமானம் இன்மை, பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பு இன்மை போன்றவைதான் என்றார்.

சிற்பி திட்டத்தின் நோக்கம்
சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதுதான் சிற்பி திட்டத்தின் நோக்கமாகும். வளர்ச்சி என்பது ஒரு பக்கம் இருந்தாலும் சில சமூக பிரச்சினைகள் அதிகரித்து வருவதை நாம் கவனித்தாக வேண்டும். போதை பொருள் ஒழிப்பு, குடிப்பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அரசு சார்ந்த தொடர்புகளை ஏற்படுத்துதல், ஆளுமைத் திறனை மேம்படுத்துதல், பெற்றோரது பேச்சை மதித்து நடத்தல், பொதுமக்களோடு தொடர்பு, இளம் வயதில் இருந்தே போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல் ஆகிய பண்புகளை சிறார்களிடையே உருவாக்க வேண்டும்.

தலைசிறந்த மாணவர்கள்
இப்படி உருவாக்கப்படும் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவார்கள். சிற்பியைப் போல மாணவர்களை செதுக்கியாக வேண்டும். செயல்திட்டத்திற்கு 16 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு புதன்கிழமையும் ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் கூடுவார்கள்.

ஊட்டச்சத்துள்ள உணவுகள்
வகுப்புகளை காவல்துறை அதிகாரிகளும், துறைசார் அதிகாரிகளும் நடத்துவர்கள். மாணவ மாணவிகளுக்கு முக்கிய உத்தரவுகள் வழங்கப்படும். வகுப்புகள் நடைபெறும் போது மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அளிக்கப்படும். தேர்வு செய்யப்பட்டுள்ள 8 இடங்களுக்கு சுற்றுலாவிற்கு மாணவ மாணவிகள் அழைத்துச்செல்லப்படுவார்கள். சிற்பி திட்ட பயிற்சி காலத்தில் எந்த வித மனித உரிமை மீறலும் இருக்கக் கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications