• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நியூட்ரினோ திட்டத்திற்கு தேனியை தேர்வு செய்தது ஏன்... வேறு இடத்தில் அமைக்க முடியாதா

|
  நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை- வீடியோ

  சென்னை : இந்திய அணுசக்திக் கழகம் நியூட்ரினோ ஆய்வு மையத்தை தேனியில் தான் அமைக்க வேண்டுமா? ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள், மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடிநீர் பாதிக்கும் என்ற எதிர்ப்பாளர்களின் அச்சங்களும் நியாயமானதே. நியூட்ரினோ மையத்தை தேனியில் இருந்து வேறு இடத்தில் மாற்றி அமைக்க முடியாதா என பல கேள்விகள் எழுந்துள்ளன.

  தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அழகான மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க இந்திய அணுசக்திக் கழகம் முயற்சித்து வருகிறது. ஆனால் அந்தப் பகுதி மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பசுமை தீர்ப்பாயத்தை நாடியதால் நியூட்ரினோ மையம் அமைக்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

  நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் இன்று இடைக்காலத் தடையும் கிடைத்துள்ளது. இந்நிலையில் எதற்காக இந்த நியூட்ரினோ ஆய்வு மையம், இங்கு என்ன செய்யப்போகிறார்கள். இதற்கு இருக்கும் ஆதரவு, எதிர்ப்பு என்ன என்பதை பார்க்கலாம். சூரியனில் இருந்து பூமியை நோக்கி பொழிந்து வரும் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் ஒரு துகளே நியூட்ரினோ. அது வானில் இருந்து பூமியை நோக்கி பெரு மழையாக நம் கண்ணில் தென்படாத வண்ணம் பொழிந்துகொண்டேதான் இருக்கிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

  நியூட்ரினோவிற்கு பச்சை கொடி காட்டிய பசுமை தீர்ப்பாயம்.. திட்டம் விரைவில் தொடங்குகிறது?!

  எதற்காக திட்டம்

  எதற்காக திட்டம்

  1965 இல் வான்வெளியில் இருந்து வந்துக்கொண்டிருந்த நியூட்ரினோவை உலகிலேயே முதன்முறையாக, டாடா ஆராய்ச்சி கழகமும் ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகமும் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து கோலார் தங்க வயலில் நடந்த ஆய்வில் பதிவு செய்தனர். அப்பொழுதிலிருந்தே இந்திய இயற்பியலாளர்களுக்கு நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் ஆவல் இருந்து வருகிறது.

  முதல் திட்டம் எங்கே

  முதல் திட்டம் எங்கே

  முதன்முதலாக நியூட்ரினோ மையம் அமைக்க நீலகிரி மாவட்டம் சிங்காராவில் ஆய்வுகள் நடந்தன. ஆனால் இந்த பகுதிக்கு அருகில் பந்திப்பூர் மற்றும் முதுமலை சரணாலயம் இருப்பதால் அங்கு அமைக்க அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தடை போட்டதால் 2010ம் ஆண்டில் தேனி மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

  மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

  மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

  காடும் காடு சார்ந்த இந்த குறிஞ்சி நிலப்பகுதியில் நியூட்ரினோ மையம் அமைக்கப்படுவதால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளுக்குப் பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும், மனித உயிர்களுக்கு ஆபத்து உண்டாகும் என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெறாமல் நியூட்ரினோ மையத்தை அமைக்கக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தன.

  அறிவியலாளர்கள் சொல்வது என்ன

  அறிவியலாளர்கள் சொல்வது என்ன

  நியூட்ரினோ ஏனைய அணுத்துகள்கள் போல எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதிநவீன கருவிகளைக்கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தினாலும் மிக குறைந்த அளவிலான நியூட்ரினோவை மட்டுமே பதிவு செய்யும் இயற்பியல் தன்மை கொண்டது. மேலும், நியூட்ரினோ துகளை பதிவு செய்யும் பொழுது ஏனைய அணுத்துகள்கள், காஸ்மிக் கதிர்களும் பதிவாக வாய்ப்புள்ளதால் ஏனையவைகள் முற்றிலுமாக வடிகட்டப்பட வேண்டும். நியூட்ரினோவை மட்டும் பதிவு செய்ய நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் 1 கிலோ மீட்டர் அளவுள்ள மலைப்பகுதி தேவை என்பதாலேயே தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியிலுள்ள மலை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் தரப்படுகிறது.

  தேனியில் தான் அமைக்க வேண்டுமா

  தேனியில் தான் அமைக்க வேண்டுமா

  மலைப்பகுதிகள் பல அமைந்துள்ள மாநிலங்களை விட்டுவிட்டு தமிழகத்தில் அமைக்க அணுசக்திக் கழகம் முயல்வது ஏன். நம் கண்ணுக்கே தெரியாமல் நியூட்ரினோக்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது என்றால் எல்லா இடத்திலும் தானே அவை வந்து கொண்டிருக்கும். அப்படியானால் மக்கள் அதிகம் வசிக்காத மலைப்பகுதியில் இந்த மையத்தை அமைக்கலாமே, மலைப்பகுதிக்கு அருகிலேயே அதிகம் மக்கள் வசிக்கும் தேனி மாவட்டத்தை தேர்வு செய்தது ஏன் போன்ற கேள்விகளுக்கு என்ன பதில் இருக்கிறது.

  வட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
  வாக்காளர்கள்
  Electors
  14,68,523
  • ஆண்கள்
   7,20,133
   ஆண்கள்
  • பெண்கள்
   7,47,943
   பெண்கள்
  • மூன்றாம் பாலினத்தவர்
   447
   மூன்றாம் பாலினத்தவர்

   
   
   
  English summary
  Why Theni district choosed for neutrino project and what is the advantage of neutrino research, why Indian atomic reseach centre is keen in implementing this project

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more