• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எல்லாத்துக்கும் திமுக, அதிமுகவா?.. கூட்டணியால் மட்டும்தான் "கட்சிகள்" உயிர் பிழைக்க முடியுமா..?

|

சென்னை: அது ஏன் திமுக, அதிமுக இல்லாமல் எந்த கட்சியும் தனியாகவே போட்டியிட முடியாதா? இந்த இரு கட்சிகளில் ஏதாவது ஒன்றின் முதுகில் ஏறி கொண்டு சவாரி செய்தே தேர்தல்களை சந்திக்க வேண்டுமா? என்ற கேள்வி இயல்பாகவே மக்கள் மனசில் எழுந்து வருகிறது.

கோஷ்டி அரசியல் கிளம்பியபோதே, கூட்டணி அரசியலுக்கான புள்ளி தமிழகத்தில் அழுத்தமாக வைக்கப்பட்டுவிட்டது.. கூட்டணி கட்சிகளின் அப்போதைய வாக்கு வங்கி, மக்களிடம் அக்கட்சிகளுக்கு உள்ள மரியாதை, பலம், பலவீனம் போன்றவைகளை அறிந்துதான் கட்சிகளுக்கு கூட்டணி தலைமை சீட்டுகளை ஒதுக்கும்.

ஒருவேளை போதுமான சீட்டுகளை ஒதுக்க முடியாமல் போய்விட்டால், "ஒதுக்குவதற்கு இதயத்திலே இடம் உண்டு... ஆனால், தொகுதிகள்தான் இல்லை" என்று கலைஞர் சொல்லிவிடுவார்.

உதிரிகட்சிகள்

உதிரிகட்சிகள்

ஆனால், அதிமுகவிலோ இதே நிலைமை மோசமாக இருக்கும்.. ஒருசீட் ஒதுக்குவதற்குகூட ஜெயலலிதா யோசித்த காலம் இருந்தது.. உதிரிகட்சிகள் என்றுகூட கூட்டணிகளை அவர் குறிப்பிட்டு சொல்வார். ஒரு தொகுதிக்கு குறைவான சீட் இல்லை, அதனால்தான் ஒரு தொகுதியை கேட்கிறோம் என்று கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஒருமுறை சொல்லி இருந்தார். ஒரே ஒரு கூடுதல் தொகுதி கிடைக்காமல் திமுக கூட்டணியில் இருந்து விலகிய வைகோவையும் தமிழகம் அன்று கண்டு வியந்தது.

 இழுபறி

இழுபறி

இதெல்லாம் எதற்காக என்றால், கூட்டணி கட்சிகளுக்கு அக்கட்சி தலைமைகள் தரும் மதிப்பீடுகள்தான் இவையெல்லாம்.. ஆட்சி அமைக்க திராணி இருந்தால், முதல் ஆளாக அள்ளி கொடுத்து கூட்டணிக்குள் இழுத்து போட்டுவிடும்.. இல்லாவிட்டால் இன்றைக்கு கூட்டணிகளுக்கும் நடந்து வரும் இதே கூத்துதான் எப்போதும் இழுபறியாய் நடக்கும்...

 தனித்து போட்டி

தனித்து போட்டி

எனினும், இந்த கட்சிகள் எல்லாம் ஏன் கூட்டணி தலைமைகளிடம் தொங்க வேண்டும்? ஏன் தனியாக நின்று போட்டியிட கூடாதா? பாமக, விசிக, மதிமுக போன்றவைகள் கால்நூற்றாண்டாக இந்த தமிழகத்தில் களம் கண்ட கட்சிகள்.. ஆண்ட கட்சிகளுக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகள்.. இவைகள் கூட பரவாயில்லை, தேசிய கட்சிகளான கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், பாஜக போன்றவைகளுக்கும் இதேபோன்ற துணிவில்லாதது ஏன்? தங்கள் கொள்கை மீதான நம்பிக்கை குறைபாடா? அல்லது துணிவில்லையா?

 சீமான்

சீமான்

10 வருடத்துக்கு முன்பு வந்த சீமானுக்கு இருக்கும் துணிவு கூட இவர்களுக்கு இல்லையா? இப்போது வந்த கமலுக்கு இருக்கும் துணிவுகூட இவர்களுக்கு இல்லையா? திமுக - அதிமுக என்ற 2 மெகா கட்சிகளே கடந்த 50 வருஷத்துக்கும் ஆட்சி அமைக்க வழிவிட்டு வருவதற்கு காரணங்கள் என்ன? என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கின்றன. ராகுல்காந்தி இத்தனை முறை தமிழகத்துக்கு வந்து வந்து செல்வதை பார்த்தாலே பரிதாபமாக உள்ளது.. ஒரு தேசிய கட்சிக்குரிய மரியாதையை கூட்டணி தலைமை தர தவறிவிடுகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.. மாறாக, கொஞ்சம் கவுரவமான இடங்களையும் பாஜக உட்பட தேசிய கட்சிகளுக்கு தர வேண்டிய நிலைமையும் வருகிறது.

சூழல்

சூழல்

அதேசமயம், சாதி, மதம், வர்க்கம் என்று தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட எல்லையை வகுத்துக்கொண்டுவிட்டன கட்சிகள்.. அதனால்தான், அவைகளை சரிக்கட்டவும், அவற்றின் வாக்காளர் தளத்தை வலுப்படுத்தவும் கூட்டணி கட்சிகளை நாடும் சூழல் ஏற்பட்டு வருகின்றன.. பணபலம், செல்வாக்கு, போன்றவைகளால், தனித்து வெல்லும் தைரியம் கூட்டணிகளுக்கும் இல்லாமல் போய்விடுவதாக தெரிகிறது. இதனாலேயே திமுகவும் அதிமுக-வுமே ஒன்றுக்கு ஒன்று மாற்றாக விளங்கி வருகின்றன.

கூட்டணி

கூட்டணி

இப்படிப்பட்ட சூழலில்தான், நாம் நம் வாசகர்களிடம் ஒரு விவாதத்தை முன்வைத்தோம்.. அதாவது "திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேர ஏன் தமிழக கட்சிகள் விடாமல் போராட வேண்டும்? சுயமாக நின்று தங்களது பலத்தை நிரூபிக்க அவர்கள் தயங்குவது ஏன்? கூட்டணி வைத்தால் மட்டும்தான் கட்சிகளால் உயிர் பிழைக்க முடியுமா? தனித்து நின்று அனைவரும் தேர்தல் களத்தை சந்திக்க பயப்படுவது ஏன்?.. வாங்க விவாதிக்கலாம் என்று அழைத்திருந்தோம்.. வாசகர்களும் அவரவர் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்..

தகுதி

தகுதி

அருமையான கேள்வி.. அதற்கான தகுதி யாரிடமும் இல்லை.. தகுதி உள்ளவர்களிடம் பணம் இல்லை

இப்போது கட்சி நடத்துபவர்கள் இருக்கிற பணத்தை காப்பாற்ற அடுத்த கட்சி இடம் பிச்சை எடுப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார் ஒரு வாசகர்.. "எனக்கும் இந்த டவுட் ரொம்ப நாளா இருக்கு... ஜாதிக்கு ஒரு கட்சி வீதிக்கு ஒரு கட்சினு வச்சிருக்கானுங்க ஆனா யாரும் தனியா 234 தொகுதிகளையும் தன் கட்சி ஆள நிறுத்த மாட்றாங்க.. அப்படியே நின்னாலும் ஒன்னு ரெண்டு தடவ நின்னுட்டு முடியாம வேற ஏங்கேயோனு போய் ஐயக்கியமாயிடறாங்க.." என்கிறார் இன்னொருத்தர்.

 ஓட்டுக்கு பணம்

ஓட்டுக்கு பணம்

ரெண்டு கட்சியும்தான் ஓட்டுக்கு பணம்கொடுக்கும்.... இத மொதல்ல ஆரம்பிச்சு வச்சதே "திருமங்கலம் பார்முலான்னு" திமுக தான்.. முதலில் திமுக தனித்து நின்ற வரலாறே இல்லை... தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த இரண்டு கட்சிதான் தெரியும்.. திராவிட கட்சிகள் திமுக அதிமுக இந்த இரண்டு கட்சிகளுக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டை மற்ற மாநிலங்கள் குறிப்பிட்டு பேசும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளன என்று பரவலான கருத்துக்களை நம் வாசகர்கள் கூறி வருகிறார்கள்.

 உச்சக்கட்ட வேதனை

உச்சக்கட்ட வேதனை

ஆனால், தங்கள் தனித்தன்மையை நிலைநாட்டவே தமிழக அரசியல் கட்சிகள் போராட வேண்டிய நிலைமையில் இருப்பது உச்சக்கட்ட வேதனை.. அதிலும் தங்கள் கட்சியின் சின்னம், கொடி, அங்கீகாரத்தை மீட்டெடுக்க கூடிய நெருக்கடியில் இருப்பது அதைவிட பரிதாபம்.. எந்த அடிப்படை பிரச்சனையாக இருந்தாலும் மக்களுடன் மக்களாக நெருக்கமாக நின்றிருந்தால், தங்கள் கட்சிகளை வலுவான வாக்கு வங்கியுடன் வைத்திருந்தால், இப்படி திமுக, அதிமுகவிடம் சீட்டுக்காக பேரம் பேசும் நிலைமைகளை அரசியல் கட்சிகள் பெற்றிருக்காது.. முதலில் அவைகள் மீண்டு வரட்டும்.. பார்ப்போம்..!

 
 
 
English summary
Why Tamil Nadu parties do not contest alone
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X