திருமாவளவன், அழகிரிக்கு "நோ" சொன்ன திமுக.. இதிலும் ஏமாற்றமா.. இன்றே ஸ்டாலினை சந்திக்க திட்டம்?
மீண்டும் முதல்வரை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திக்க போகிறார்களா
சென்னை: 21 மாநகராட்சிகளில், மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் பதவிகளை திமுக வழங்கவில்லை என்பதால், கூட்டணி கட்சிகள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து 21 மாநகராட்சிகளிலும் மேயர்கள், துணைமேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிகளையும் அவர்கள் ஏற்று விட்டனர்.
அடுத்தகட்டமாக மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.. இதற்கான தேர்தல் நாளை 30 மற்றும் 31-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

மாநகராட்சிகள்
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருப்பூர், நெல்லை, ஈரோடு, கரூர், ஓசூர், தூத்துக்குடி, வேலூர், நாகர்கோவில், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி, தஞ்சாவூர், கும்பகோணம், திண்டுக்கல், தாம்பரம், ஆவடி ஆகிய 21 மாநகராட்சிகளிலும் இந்த தேர்தல் நடைபெறுகிறது... வார்டுகளின் எண்ணிக்கையை பொறுத்து மண்டலங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும்... அந்த வகையில், சென்னையில் மட்டும் மொத்தம் 15 மண்டலங்கள் இருக்கின்றன.

திமுக
இதுதவிர 8 நிலைக்குழுக்கள் உள்ளன... இந்த மண்டல தலைவர் பதவி மற்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் பதவி திமுக கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படாது என்ற திமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறதாம்.. மண்டலக் குழு,கணக்குக் குழு, பொது சுகாதார குழு, கல்விக் குழு, வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு, நகரமைப்புக் குழு, பணிகள் குழு தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த பதவிகளுக்குதான் கூட்டணி கட்சிகளும் குறி வைத்து காத்துள்ளன..

மண்டலம்
அதுமட்டுமல்ல, சென்னையில் காங்கிரசுக்கு 14 கவுன்சிலர்கள் இருப்பதால் ஒரே ஒரு மண்டலமாவது ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் நாகர்கோவில் மாநகராட்சியிலும் காங்கிரசுக்கு மண்டல குழு தலைவர் பதவி ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்தல்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த பதவி குறித்து பலமுறை விருப்பமும் தெரிவித்திருந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான மண்டல குழு தலைவர் பதவி இடங்களை, திமுக தலைமை தலைமை அறிவிக்கவில்லை..

கூட்டணிகள்
அதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு அந்த பதவிகள் வழங்கப்படாது என்பது தெரியவந்துள்ளது.. எனவே, கூட்டணிகள் அதிர்ந்து போய் கிடக்கின்றனவாம். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசவும் கூட்டணி கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. ஏற்கனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சில குறிப்பிட்ட இடங்கள், பதவிகள் வேண்டும் என்று கேட்டு தலைமையிடம் கூட்டணி கட்சிகள், லிஸ்ட் தந்திருந்தன..

ஆளும் கட்சி
ஆனால், ஆங்காங்கே உள்ள ஆளும் கட்சியினர், போட்டி வேட்பாளர்களை நிறுத்தி, கூட்டணி கட்சிகளுக்கான பதவிகளையும் கைப்பற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டனர்.. பிறகு திருமாவளவன் இதுகுறித்து ஓபனாகவே செய்தியாளர்கள் கூட்டத்தில் குமுறினார்.. குற்றஞ்சாட்டி வேதனை தெரிவித்தார்.. இப்படி கூட்டணி கட்சிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக, பதவியேற்ற அனைவரையும் பதவி விலகுமாறு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

முதல்வர் கெடு
ஆனால், பெரிய அளவில் அந்த உத்தரவை திமுகவினர் மதிக்கவில்லை என்றே தெரிகிறது.. சிலர் இன்னமும் பதவியை ராஜினாமா செய்யவில்லை.. இதற்கு முதல்வர் கெடுவும் வைத்திருந்தார்.. இப்படிப்பட்ட சூழலில், அடுத்த சிக்கல் கூட்டணிகளிடம் ஏற்பட்டுள்ளது.. இன்று காலைதான் முதல்வர் சென்னை திரும்பி உள்ள நிலையில், கூட்டணி தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இதுகுறித்து பேசுவார்களா என்பது தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications