சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோட்டம் அதிருமா?.. திமுகவுக்கு மெசேஜ் தருவாரா ராமதாஸ்.. பலத்தை காட்டுமா பாமக.. செம எதிர்பார்ப்பு

உள்ளாட்சி தேர்தலில் பாமக முன்னெடுத்த செயல்பாடுகள் மிகுந்த கவனத்தை பெற்றன

Google Oneindia Tamil News

சென்னை: நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை பாமக எதிர்கொண்ட விதமும், பிரச்சாரங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இன்றைய தினம் கிளப்பி விட்டுள்ளது.. இதையடுத்து பாமகவின் அடுத்தடுத்த நகர்வுகளை பிற கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பிருந்தே, பாமகவின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருந்தன.. திமுக ஆட்சிக்கு வந்ததுமே, கூட்டணியில் உள்ள அதிமுகவுடன் பாமக அவ்வளவாக நெருங்காமல் இருந்தது.. சட்டசபை நிகழ்வுகளின்போதும், திமுகவை சாடி எந்த கருத்தையுமே முன் வைக்கவில்லை.

பாஜக உறுப்பினர்கள் அவையில் கேள்வி கேட்ட அளவுக்குகூட, பாமக தரப்பில் யாருமே திமுகவை எதிர்த்து கேள்வி எழுப்பவில்லை.. விமர்சிக்கவுமில்லை.

ஸ்டாலின் Vs எடப்பாடி.. 3 அஸ்திரங்களுடன் களமிறங்கிய அதிமுக.. கிராமப்புற ஓட்டுக்கள் கைகொடுக்குமா?ஸ்டாலின் Vs எடப்பாடி.. 3 அஸ்திரங்களுடன் களமிறங்கிய அதிமுக.. கிராமப்புற ஓட்டுக்கள் கைகொடுக்குமா?

 ட்வீட்களும்

ட்வீட்களும்

மேலும், டாக்டர் ராமதாஸ், அன்புமணியின் பேச்சுக்களும், பேட்டிகளும், ட்வீ ட்களும், அறிக்கைகளும், திமுகவை பெரும்பாலும் புகழ்ந்தே இருந்தன.. கடந்த 5 வருடமாக திமுகவை அதிகமாக சாடியவர் டாக்டர் ராமதாஸ்தான்.. காட்டமான அறிக்கைகளை விட்டவரும் அவரேதான்.. ஆனால், ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற தினத்தில் இருந்தே இது மாறுபட தொடங்கியது.

 பாமக கூட்டணி

பாமக கூட்டணி

நல்ல இணக்கமான போக்கு இரு தலைவர்களிடமும் ஏற்பட்டது.. இதனால் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி வைக்ககூடுமோ என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.. ஆனால், தனியாக போட்டி என்று அதிரடியாக அறிவித்துவிட்டனர்.. காரணம், இந்த உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான எண்ணிக்கையில் நகராட்சிகளை கைப்பற்ற வேண்டும் என்பதை அஜெண்டாவாக கொண்டு, பாமக தன்னுடைய தேர்தல் பணியை வேகப்படுத்தியது.

 வட தமிழகம்

வட தமிழகம்

வடதமிழகத்தில் கணிசமான வாக்குவங்கியை நிலையாக வைத்துள்ள பாமக, அடுத்தடுத்த தேர்தல்களை எப்படி சந்திக்கலாம் என்பது குறித்து யோசிக்கவும் ஆரம்பித்தது.. கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே எதிர்பார்த்த வெற்றி பாமகவுக்கு கிடைக்கவில்லை என்றாலும், இந்த உள்ளாட்சி தேர்தலை வைத்து சுயபரிசோதனைக்கு கட்சியை உட்படுத்தவும் திட்டமிட்டார்.

 இணைய வழி ஆலோசனை

இணைய வழி ஆலோசனை

கூட்டணி என்ற விஷயத்திலும் நிறைய முறை யோசித்தது பாமக.. இதுசம்பந்தமாக இணையவழி ஆலோசனை கூட்டத்தை நடத்திய ராமதாஸ் நிர்வாகிகளிடம் பேசும்போது, "பாமகவால் கூட்டணி கட்சிகள் பலன் அடைந்தன. அவர்களால் பாமகவுக்கு பலன் கிடையாது.. சொந்த கட்சிக்காரர்களைக்கூட கட்டுப்படுத்த முடியாத நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.. அவரோடு சேர்ந்து நம்மால் வெற்றி பெற முடியுமா? அதனால், உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை நிரூபிக்க வேண்டும்" என்று சொன்னதாக தகவலும் வெளியாகின.

 தொகுதிகள் ஒதுக்கீடு

தொகுதிகள் ஒதுக்கீடு

அதுமட்டுமல்ல, பாமக ஏன் தனித்து போட்டி என்பது குறித்து நாம், பாமகவினர் சிலரிடமே அப்போது கருத்து கேட்டிருந்தோம்.. அதற்கு அவர்கள் சொல்லும்போது, "எம்பி தேர்தலுக்கு பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஏராளமான இடங்களில் எங்களுக்கு போட்டியாக அதிமுக வேட்பாளர்களை நிறுத்திவிட்டது.. ஒருவேளை நாங்கள் அந்த சமயத்தில் தனித்து போட்டியிட்டிருந்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமே 3 சேர்மன் பதவிகளை பிடித்திருப்போம்... நாங்கள் கேட்ட இடங்கள் எதையுமே அவர்கள் தரவில்லை.. நிறைய இடங்களில் வேட்பாளர்களை வாபஸ் பெறவில்லை.. இதுதான் காரணம்" என்று தெரிவித்திருந்தார்.

பிரச்சனைகள்

பிரச்சனைகள்

இந்த காரணங்கள் ஓரளவு உண்மை என்பது, அதிமுக தன்னுடைய தொகுதி பங்கீட்டு பிரச்சனையை பாஜகவுடன் நடத்தியபோதே தெரியவந்தது.. எனினும், பாமக தன்னை முழுக்க முழுக்க நம்பி மட்டுமே களமிறங்கியது.. தன்னுடைய செல்வாக்கும், ஓட்டு வங்கியும் நிறைந்த வடமாவட்டங்களிலேயே தேர்தல் நடந்தது.. 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் பாமகவின் பலம் பெற்றவை என்பதால் ஓரளவு நம்பிக்கையுடனும் பிரச்சாரத்தை ஆரம்பித்தது..ஆனால், திமுகவை சாடாமலேயே பிரச்சாரத்தை முடித்தும் விட்டது.

 சொந்த பலம்

சொந்த பலம்

எப்படியும் அதிகப்படியான வெற்றியை இந்த முறை பெற்றுவிடுவோம் என்றும், அதன் மூலம் தங்கள் பலத்தை திமுகவிடம் காட்ட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதாகவும் தெரிகிறது.. இந்த தேர்தல் முடிவுகளை கருத்தில் கொண்டு அடுத்து வரும் எம்பி தேர்தலுக்கு வியூகங்கள் வகுக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. உள்ளாட்சி தேர்தலுக்கே திமுகவுடன் பாமக கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எம்பி தேர்தலின் கூட்டணிக்கான முன்னோட்டமாக இன்றைய ரிசல்ட் அமையும் என்று பாமக எதிர்பார்க்கிறது.

 சொந்த பலம்

சொந்த பலம்

எப்படியும் அதிகப்படியான வெற்றியை இந்த முறை பெற்றுவிடுவோம் என்றும், அதன் மூலம் தங்கள் பலத்தை திமுகவிடம் காட்ட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதாகவும் தெரிகிறது.. இந்த தேர்தல் முடிவுகளை கருத்தில் கொண்டு அடுத்து வரும் எம்பி தேர்தலுக்கு வியூகங்கள் வகுக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. உள்ளாட்சி தேர்தலுக்கே திமுகவுடன் பாமக கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எம்பி தேர்தலின் கூட்டணிக்கான முன்னோட்டமாக இன்றைய ரிசல்ட் அமையும் என்று பாமக எதிர்பார்க்கிறது.

அறிக்கை

அறிக்கை

இதுபோக, நேற்று பாமக தலைவர் ஜிகே மணி ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.. அதில் "பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்டோபா் 16ம் தேதி மாலை 6 மணியளவில் இணையவழியில் நடைபெறும். நிறுவன தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூட்டத்துக்கு முன்னிலை வகிக்க உள்ளனா்... தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாமகவின் நிா்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும்"என்று அழைப்பு விடுத்துள்ளார்.. உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட் வரும் நிலையில், 16-ம் தேதி நடக்க உள்ள இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

English summary
Will PMK succeed in the Local body election and whats its next plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X