தவெக தேர்தல் அறிக்கை வருகிறது! விஜய்யின் "புளுபிரின்ட்" தமிழக தலையெழுத்தை மாற்றுமா? மின்சார மானியம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று வெளியிடும் தேர்தல் அறிக்கை மாநில அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெறும் பிரம்மாண்டமான நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியமைக்கக்கூடிய தொலைநோக்குத் திட்டங்களை அவர் அறிவிக்கிறார். சமூக நீதி, மாவட்ட வாரியான வளர்ச்சி மற்றும் ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதால், அரசியல் வட்டாரங்களில் இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (16.04.2026) மாலை 3 மணிக்கு சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பில் கட்சியின் தேர்தல் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார்.

TVK Election Manifesto TVK Vijay Tamil Nadu Assembly Election 2026 Tamil Nadu Election 2026 2026 2026

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி 800 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளதால், க்யூஆர் கோடு அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வருவதைத் தவிர்த்து நேரலை வாயிலாகக் கண்டு ஒத்துழைக்குமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

தவெக தேர்தல் அறிக்கை - மிகப்பெரிய எதிர்பார்ப்பு

தவெக தனது கொள்கை விளக்க மாநாட்டில் முன்வைத்த மதச்சார்பற்ற சமூக நீதி என்ற வலுவான கருத்தியலின் அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கை செதுக்கப்பட்டுள்ளது. வெறும் கவர்ச்சித் திட்டங்களாக இல்லாமல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயல் திட்டங்களை விஜய் இதில் முன்வைக்கிறார். குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட உள்ள ஊதியம் மற்றும் பெண்களுக்கான சிறப்பு உதவித்தொகை குறித்த அறிவிப்புகள் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், படித்த இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அரசுப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தையும் அவர் இத்திட்டத்தில் முதன்மைப்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

முக்கிய எதிர்பார்ப்புகள்

இந்த அறிக்கையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், மற்ற கட்சிகளைப் போல மாநிலம் முழுமைக்குமான பொதுவான வாக்குறுதிகளைத் தாண்டி, ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவமான தேவைகளை உணர்ந்து மாவட்ட வாரியான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் வழங்குகிறாராம்.. இது அந்தந்தப் பகுதி மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு நேரடி முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கான நியாயமான விலை, சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்கான மின்சார மானியம் போன்ற திட்டங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சியை உள்ளூர் மட்டத்திலிருந்தே தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.


மின்சார மானியம்

நிர்வாக ரீதியாக, அரசுத் துறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் ஊழலை வேரறுக்கவும், மக்கள் தங்களின் தேவைகளுக்காக அதிகாரிகளைத் தேடி அலையாத ஒரு வெளிப்படையான சூழலை உருவாக்கவும் தவெக உறுதியளிக்க முடிவு செய்துள்ளதாம்.

மாநில சுயாட்சி மற்றும் சமூக நீதியில் சமரசமற்ற போக்கை எடுத்துள்ள விஜய், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தற்போதைய இடஒதுக்கீடு முறையைப் பாதுகாப்பதற்கான வலுவான உறுதிமொழிகள் உட்பட ஏழை மாணவர்களுக்குத் தரமான உலகத்தரம் வாய்ந்த கல்வி இலவசமாகக் கிடைப்பதற்கான சிறப்புத் திட்டங்களும் இதில் முக்கிய இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மொத்தத்தில், இன்று வெளியாக போகும் விஜய்யின் தேர்தல் அறிக்கை வெறும் வாக்குறுதிகளின் தொகுப்பு மட்டுமல்லாமல், தமிழகத்தை ஒரு புதிய பாதையில் அழைத்துச் செல்லும் புளூபிரிண்ட் ஆக அமையும் என்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+