அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு!
சென்னை: தவெகவை கூட்டணியில் இணைப்பதற்காக டெல்லி பாஜக தலைமை காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எல்லாரும் வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் அனல்பறந்து வரும் நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் அனைத்தும் கிட்டத்தட்ட உறுதியாகி தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற உள்ள கட்சிகள் யார் யார் என இன்னும் இறுதி செய்யப்படாத நிலை உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே தகவல் பரவி வருகின்றன. தவெகவை கூட்டணியில் இணைப்பதற்காக டெல்லி பாஜக தலைமை காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான கேள்விக்கு அண்மையில் பதிலளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அது வதந்தி எனத் தெரிவித்தார். ஆனால் அதே கேள்விக்கு தற்போது பதில் அளிக்க முடியாது என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சரும் தமிழகத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலிடம் விஜய் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், என்டிஏ கூட்டணியின் தமிழ்நாடு தலைமை எடப்பாடி பழனிசாமி தான். கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் எனக் கூறினார்.
தவெக தரப்பில் இது தொடர்பான கேள்விக்கு அக்கட்சியின் இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், யூகங்களுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதனால், தவெக கூட்டணி தொடர்பான யூகங்கள் உலவி வருகின்றன.
இந்நிலையில், திருச்சியில் இன்று பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் விஜய் என்.டி.ஏ கூட்டணிக்கு வருகிறாரா என்ற கேள்விக்கு எல்லாரும் வருகிறார்கள் என்று பதில் அளித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு












Click it and Unblock the Notifications