Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவரை பிரிந்து வாழும் பெண்ணின் வீட்டிற்குள் இருந்து அலறிய ஏட்டய்யா! இரவில் நடந்த பரபரப்பு சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பட்டினம்பாக்கத்தில் தலைமை காவலருடன் வசித்து வந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் கபில் தேவ். இவரது மனைவி விக்னேஸ்வரி (27). இவர்களுக்கு 11 வயதிலும், 5 வயதிலும் இரு குழந்தைகள் உள்ளனர். நன்றாக போய் கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில் ஒரு நாள் திடீரென சூறாவளி வீசியது.

அதாவது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கபில்தேவை பிரிந்த விக்னேஸ்வரி அதே பகுதியில் தனி வீடு எடுத்து தங்கி வந்தார்.

பாஸ்ட் ஃபுட்

பாஸ்ட் ஃபுட்

விக்னேஸ்வரி தடகள வீராங்கனை. இவர் கணவரை விட்டு பிரிந்ததால் தனது வாழ்வாதாரத்திற்காக பாஸ்ட் ஃபுட் கடையை நடத்தி வந்தார். அப்போது அவரது கடைக்கு முகிலன் என்பவர் அடிக்கடி வந்ததாக சொல்லப்படுகிறது. இவர் நீலாங்கரை காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார்.

லிவிங் டுகெதர்

லிவிங் டுகெதர்

நாளடைவில் தனிமையில் இருந்த விக்னேஸ்வரிக்கும் முகிலனுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு திடீரென விக்னேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

108 ஆம்புலன்ஸ்

108 ஆம்புலன்ஸ்

இதனால் பதறி போன காவலர் முகிலன் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தார். அந்த வாகனத்தில் இருந்த மருத்துவ ஊழியர், விக்னேஸ்வரியை பரிசோதனை செய்ததில் அவர் இறந்ததை உறுதி செய்தார். இதையடுத்து அந்த மருத்துவ ஊழியரே போலீஸுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து போலீஸார் வந்து விக்னேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விக்னேஸ்வரி தற்கொலை

விக்னேஸ்வரி தற்கொலை

விக்னேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவரது கணவர் கபில்தேவ், உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் விக்னேஸ்வரியின் இறப்பிற்கு முகிலன்தான் பொறுப்பு என அவரிடம் தகராறு செய்தனர். இதுதொடர்பாக கபில் தேவ் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். முகிலனுக்கும் விக்னேஸ்வரிக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு குடும்பத் தகராறு நடந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்த முகிலன்

வீட்டில் இருந்த முகிலன்

மேலும் விக்னேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது முகிலன் வீட்டிற்குள் இருந்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட விக்னேஸ்வரி கதவையும் தாழிடவில்லை. அவ்வாறிருக்கையில் விக்னேஸ்வரியை முகிலன் ஏன் காப்பாற்றவில்லை என்ற கேள்வி எழுகிறது. அக்கம்பக்கத்தினர் கூறியதை போல் விக்னேஸ்வரியும் முகிலனும் சண்டையிட்டதை தான் பார்த்ததாக அவரது சகோதரர் போலீஸில் சாட்சி சொல்லியுள்ளார். இவரது சாவில் மர்மம் இருப்பதால் முகிலனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+