ஆரம்பத்திலேயே அசத்தும் அமைச்சர் சிவசங்கர்.. அரசு பேருந்துகளில் பெண்களுக்கு 2 லோயர் பெர்த் ஒதுக்கீடு
அரசு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கீடு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக லோயர் பெர்த் படுக்கை வசதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படுக்கை எண் 1LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்து இணையத்தில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் திமுக அரசு பொறுப்பேற்றது. திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற சிறப்பு திட்டத்தை அறிவித்தது . இதன் மூலம் பெண் பயணிகளின் எண்ணிக்கை முன்பை காட்டிலும் அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு என இரண்டு பிரத்தியேக படுக்கைகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

லோயர் பெர்த்
பெண்கள் இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்யும் போதும், கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் போது அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டால் கடும் சிரமம் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, படுக்கை எண் 1LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்து இணையத்தில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பெண்களுக்கு ரிசர்வ்
2 படுக்கைகளை ஒதுக்கீடு செய்து இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம், குளிர்சாதனம் இல்லாத பேருந்துகளில் பெண்களுக்கு பிரத்யேக படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு
பேருந்து புறப்படும் வரை பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாதபட்சத்தில் 2 படுக்கைகள் பொது படுக்கையாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெண்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு அவர்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

பயணம் இனிதாகும்
போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக சிவசங்கர் பதவியேற்ற உடன் பெண்களைக் கவரும் வகையில் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தனியாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் பயணத்தை இனிமையானதாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications