கோவையில் போலீசுக்கே திருடனால் நடந்த விசித்திரம்.. ஆடிப்போக வைத்த 'எக்ஸ்சேஞ்ச்'
கோவை: கோவையில் காவல் துறையினரின் ரோந்து வாகனத்தையே திருடி வந்து, மற்றொரு நபரின் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரின் செயல் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. காவல்துறை வாகனத்தையே திருடி வந்து, அதை 'எக்ஸ்சேஞ்ச்' செய்வது போல விட்டு விட்டு வேறொரு வாகனத்தைத் திருடிச் சென்ற அந்தப் பலே திருடன் யார் என காவல் துறை உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
கோவை, சிவானந்தா காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 30-ஆம் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளை வழக்கம் போல வீட்டின் அருகே உள்ள சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு உறங்கச் சென்று உள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காணாமல் போன தனது வாகனத்தைத் தேடிய போது, அந்த இடத்திற்கு அருகிலேயே மற்றொரு மோட்டார் சைக்கிள் சாவியுடன் நிற்பதை அந்த இளைஞர் கவனித்தார். இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்த போது, அங்கு சாவியுடன் நின்ற வாகனம் ரத்தினபுரி காவல் துறையினர் ரோந்து பணிக்குப் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.
காவல் துறையினரின் வாகனமே அங்கு நின்றதால் குழப்பம் அடைந்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர், முதலில் ரத்தினபுரி காவல் நிலையத்திற்குச் சொந்தமான ரோந்து மோட்டார் சைக்கிளை காவல் நிலையத்தில் இருந்து திருடி உள்ளார்.
அந்தப் போலீஸ் பைக்கிலேயே சிவானந்தா காலனி ராதாகிருஷ்ணன் சாலைக்கு வந்து உள்ளார். பின்னர், அந்தப் போலீஸ் பைக்கை அங்கேயே சாவியுடன் விட்டு விட்டு, அந்த நிறுத்தி இருந்த உணவக ஊழியரின் பைக்கைத் திருடிக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து உள்ளார்.
காவல்துறை வாகனத்தையே திருடி வந்து, அதை 'எக்ஸ்சேஞ்ச்' செய்வது போல விட்டு விட்டு வேறொரு வாகனத்தைத் திருடிச் சென்ற அந்தப் பலே திருடன் யார் ? என்பது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.போலீஸ் வாகனத்தையே திருடன் கையாண்ட விதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications