தொகுதி மாறுகிறாரா வானதி சீனிவாசன்.. கோவை வடக்குக்கு ஜம்ப்? அவரே கொடுத்த பதில் இதுதான்!
கோவை: கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் வானதி சீனிவாசன் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தொகுதி மாற இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், கோவை வடக்கு தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட, பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் இந்த முறை கோவை வடக்கு தொகுதிக்கு மாற இருப்பதாக ஒரு தகவல் பரவை வருகிறது. கடந்த தேர்தலிலேயே 1,728 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார் வானதி. அதனால், இந்த முறை பாதுகாப்பாக தொகுதி மாறப்போவதாக தகவல் உலவி வருகிறது.

இந்நிலையில், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் மோடி முகாம் நிகழ்வினை, பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களையும், மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்களையும் பொது மக்களுக்கு வழங்கினார்.
பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் தேர்தல் பணிகளை துவங்கி உள்ளோம். மோடி முகாம் என்ற பெயரில் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகளுடன் இணைந்து முகாம் நடத்தப்பட்டு இருக்கிறது. திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு. வரும் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுவதால் இந்த தொகுதியில் தற்போது நான் அதிக கவனம் செலுத்துவதாக கூறுவது தவறு. கோவை வடக்கு தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும்.
எங்களை பொறுத்தவரை அ.திமு.க.-பா.ஜ.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி பணிகளை செய்து வருகிறோம். 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும், எடப்பாடி பழனிசாமியை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து இடங்களிலும்ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள், முகாம்கள் நடத்தப்படும். இதற்கு முன்பும் கோவை வடக்கு தொகுதியில் மட்டுமல்ல அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் பணிகள் செய்துள்ளோம்." எனத் தெரிவித்தார்.
-
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications