செந்தில் பாலாஜி பற்றி பேசிய வானதி.. காயத்ரியை நினைவூட்டிய செய்தியாளர்! என்ன சொன்னார் தெரியுமா?
கோவை: தொகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை திறந்துவைத்த பாஜக எம்.எல்.ஏவிடம், காயத்ரி ரகுராம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்து இருக்கும் பதிலை விரிவாக காண்போம்.
கோவை ராமநாதபுரம் 63வது வார்டில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்கள் பயன்பாடிற்காக திறந்து வைத்தார்.
இந்த குடிநீர் இயந்திரத்தை பயன்படுத்தை அந்த வார்டை சேர்ந்த மக்களுக்கு நவீன அட்டை ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதனைக் கொண்டு ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போராட்டத்துக்கு திட்டம்
இதனை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், "இதுபோன்ற இயந்திரங்களை தெற்கு தொகுதியில் ஐந்து இடங்களில் இந்த ஆண்டுக்கு நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோவை மாநகரில் சாலை வசதிகள் குறித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
சாலை வசதிகளை பொறுத்தவரை தமிழக அரசு கோவை மாநகராட்சிக்கு துரோகம் செய்து வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுவதில்லை. மாநகராட்சி தேர்தலின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கொலுசு கொடுத்து ஏமாற்றி விட்டார். இதற்கான பாடத்தை கோவை மக்கள் அவருக்கு புகட்டுவார்கள்.

சூயஸ் திட்டம்
நான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறேன். அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை அவர்கள் புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது. சூயஸ் திட்டம் என்பது 24 மணி நேரம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்தான். அதேசமயம் பொது குடிநீர் குழாய்களை அவர்கள் அகற்றினால் இது குறித்து மாநகராட்சியிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்வோம்." என்றார்.

காயத்ரி ரகுராம்
அப்போது பாஜகவில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்த கருத்து குறித்து பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "ஏதேனும் சிக்கல்கள் அவருக்கு இருந்திருந்தால், இதற்கென கட்சியில் இருப்பவர்களிடம் அது குறித்து அவர் தெரிவித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருக்கலாம். இனியாவது இதுபோன்ற முயற்சிகளை எடுத்தால் சரியாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை இன்றைய தேதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித மாற்றங்களும் இல்லை." என்றார்.

காயத்ரி வெளியிட்ட பதிவு
பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா, அதே கட்சியை சேர்ந்த டெய்சியை இழிவாக தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அக்கட்சியை சேர்ந்த காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தார். அதில், "பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார்.

கட்சிப் பெண்கள்
இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. பொது இடத்தில் அழுக்குத் துணிகளை துவைக்கிறோம் என்று சொல்கிறார்கள் செ & கோ ட்ரோல்ஸ். ஆனால் சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜல்ட்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை.

ட்ரோல் செய்கிறார்கள்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு நம்மை ட்ரோல் செய்கிறார்கள் வார் ரூம், செல்வா & கோ. புகார் எழுந்தபோது என்ன நடந்தது? நான் கோபமாக இருக்கிறேன். களப்பணி இல்லாமல் சிலர் ஜல்ட்ரா மட்டும் செய்தால் இதுதான் நடக்கும். திருச்சி சூர்யா & கோ அல்லது செல்வா & கோ மீண்டும் எங்களை ட்ரோல் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

சைக்கோ மூளை
சைக்கோ மூளையால் மட்டுமே முடியும். என் இரத்தம் கொதிக்கிறது. கட்சியை குறை சொல்ல வேண்டாம் என அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள். திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மை சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன். இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்.

அண்ணாமலை ஆக்சன்
கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு." என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து, "காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் ஆறு மாத காலத்திற்கு அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு!












Click it and Unblock the Notifications