யூடியூப் பிரபலத்துக்கு “பிராப்ளம்”.. ஜிபி முத்துவுடன் அதிவேக ரெய்டு! TTF வாசன் மீது போலீஸ் வழக்கு
கோவை: டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவை பின் இருக்கையில் அமர வைத்து கோவையில் அதிக வேகமாக பைக் ஓட்டிச்சென்ற யூடியூபர் டிடிஎப் வாசன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.
கோவையை சேர்ந்த வாசன் என்ற இளைஞர் பைக்கில் அதிக வேகத்தில் சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து Twin Throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவர் வெளியிடும் வீடியோக்கள் பைக் மீது ஆர்வம் கொண்ட சிறுவர்கள், இளைஞர்களுக்கு பிடித்துவிட படிப்படியாக இவரது சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.
தற்போது இவரது யூடியூப் சேனலுக்கு இருக்கும் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை 32 லட்சம். இருசக்கர வாகனத்திலேயே பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இவர் பைக் சாகசங்கள் மட்டுமின்றி தனது பயண அனுபவங்களையும் VLOG ஆக பதிவிட்டு வந்தார். இப்படி யூடியூப்பில் உச்சத்துக்கு சென்ற இவர் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களையும் வாங்கி சாகச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

விமர்சனங்கள்
இவரது வீடியோக்கள் இளைஞர்களை ஆபத்தான பைக் சாகசங்களுக்கு தூண்டுவதாகவும், இளைஞர்கள், சிறுவர்களை இவர் தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டுக்களும் உள்ளன. 32 லட்சம் சப்ஸ்கிரைபர்களை வைத்திருந்தாலும் இளைஞர்கள், சிறுவர்கள், பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்டவர்களை தவிர்த்து பெரும்பாலான மக்கள் TTF வாசனை அறிந்திருக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு வரை.

பிறந்தநாள் கொண்டாட்டம்
கடந்த ஜூலை மாதம் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சந்திப்பை போலீசாரின் அனுமதியை பெற்று நடத்தி இருக்கிறார். இதற்கு தனது வீட்டிலிருந்து பைக்கில் தனது நண்பர்களுடன் அவர் புறப்பட்டார். செல்லும் வழிநெடுகிலும் பொதுமக்கள், சிறுவர்கள், பெண்களை அவரை வரவேற்று நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடியதுடன், செல்பி எடுத்துக்கொண்டனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

பிரபமும் பிராப்ளமும்
இதனை தொடர்ந்து பிறந்தநாள் சந்திப்பு நடைபெறும் இடத்துக்கு சென்ற அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று திக்குமுக்காட வைத்தனர். காவல்துறையினர் அங்கு வந்து TTF வாசனிடம் பேசி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டதுடன் ஊடகங்களிலும் செய்தியாக வந்தது. அதன் மூலம் அனைத்து தரப்பினராலும் அறியப்படும் முகமாக மாறி இருக்கிறார் TTF வாசன். அப்போதே அவர் வேகமாக சென்ற வீடியோ பகிர்ந்து அவர் மீது அவரை கைது செய்ய பலரும் வலியுறுத்தினர்.

போலீஸ் எச்சரிக்கை
அப்போதே கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வாசன் போன்ற நபர்கள் தாங்கள் ஏதோ நல்லது செய்கிறோம். பெரிய ஆட்கள் என்று நினைக்கிறார்கள். இளைஞர்களுக்கு ரோல் மாடல் என்று நினைத்துக்கொண்டு டிடிஎப் வாசன் போன்றவர்கள் இளைஞர்களின் வாழ்க்கையை வீணடித்து வருகிறார்கள். காவல்துறை இதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம். நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம். வேகமாக செல்ல கூடாது." என்றார்.

ஜிபி முத்துவுடன் ரெய்டு
இந்த நிலையில் சமீபத்தில் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து ரேஸ் உடை அணிந்து டிடிஎப் வாசனுடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து கோவையில் ரெய்டு சென்றார். அப்போது டிடிஎப் வாசன் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி அதிவேகத்தில் சென்றதால் ஜி.பி.முத்து அலறினார். இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் டிடிஎப் வாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். வாசனும் இன்று தன்னுடைய யூடியூப் சேனலில் சரண்டர் ஆகப்போகிறேன் என்று பதிவிட்டார்.

வழக்குப்பதிவு
இந்த நிலையில், அவர் மீது கோவை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கடந்த 14.09.2022ம் தேதி TTF வாசன் என்ற நபர், அவரது இரு சக்கர வாகனத்தில் Youtuber G.P. முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து, கோவை மாநகரம், D3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பாலக்காடு மெயின் ரோடு, MDS பேக்கரி அருகே, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டி, அதை பதிவு செய்து, அவரது Twin Throttlers என்ற Youtube channelல் வீடியோ வெளியிட்டுள்ளார். இது சம்மந்தமாக, D3 போத்தனுார் காவல் நிலைய குற்ற எண். 582/2022 u/s 279 IPC, 184 MV Actல் மேற்படி TTF வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications