இனிமேல் வங்கி கணக்கு விவரம் தந்தாலும் குற்றவாளிகளே.. கிருஷ்ணகிரி பேங்க்கில் பாருங்க.. போலீஸ் அலர்ட்
கோவை: ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் நபர்களிடம், வங்கிக்கணக்கு விபரங்களை கொடுத்தால் அவர்களும் குற்றவாளியாக கருதப்பட்டு, கைது செய்யப்படுவார்கள் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் சில அறிவுரைகளையும் பொதுமக்களுக்கு வழங்கியிருக்கிறார்.
3 மாதங்களுக்கு முன்பு, லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து சைபர் குற்றங்கள் தமிழகத்தில் பெருமளவு அரங்கேற்றப்படுவதாக புகார் எழுந்தது.. அதாவது, சைபர் கிரிமினல்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து தமிழகத்தில் வசிப்பவர்களை தொடர்பு கொண்டு ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டது.
ஆன்லைன் மோசடி: ஆன்லைன் மோசடி தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதை அடுத்து சைபர் கிரைம் போலீசார் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.. தமிழகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்க சுமார் 5 ஆயிரம் சிம்கார்டுகளை முடக்கும் பணியில் ஈடுபட்டதுடன், இதற்காக தொலைத்தொடர்புத் துறையுடன் இணைந்து தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும், இணையவழி மோசடியால், ஒவ்வொரு நாளும் பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.. குறிப்பாக, கோவையில் ஆன்லைன் மோசடிகள் பெருகி கொண்டே வருகிறது. அதாவது, கடந்த ஒரு வருடத்தில் மட்டும், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், ஆன்லைன் மோசடி குறித்து 8,254 புகார்களை பெற்றுள்ள நிலையில், 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மொத்தம், ரூ.94 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதுடன், ரூ.11 கோடியை மீட்டு, 50 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதுமட்டுமல்ல, ஒருசிலர், தாங்கள் செய்வது குற்றம் என்று தெரிந்தும், மோசடி பேர்வழிகளுக்கு தங்களது வங்கிக்கணக்கு விபரங்களை தந்து, கமிஷனை பெற்றுக் கொள்கிறார்களாம்..
கிருஷ்ணகிரி: சமீபத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மாதப்பன் என்பவர், நடப்பு கணக்கு உட்பட, 8 வங்கிக்கணக்குகளை துவங்கி, மோசடி நபர்களுக்கு வழங்கியிருக்கிறார்.. இதை வைத்து, மோசடி பேர்வழிகளும், பண மோசடி செய்துள்ளனர். 2 வங்கிக்கணக்குகள் வாயிலாக மட்டும், 2 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருந்தது.. இப்போது மாதப்பன் ஜெயிலில் உள்ளார்.
எனவே, மோசடியில் ஈடுபடாவிட்டாலும், அதற்கு உடந்தையாக, தங்களது வங்கிக்கணக்கு விபரங்களை கொடுத்தாலும், அதுவும் குற்றமாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என்கின்றனர், சைபர் கிரைம் போலீசார்.
எச்சரிக்கை: இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் சொல்லும்போது, மோசடிக்கு தெரிந்தே உதவுபவர்கள் குற்றவாளிகள்தான்.. மோசடியில் இருந்து சிறிய அளவு கமிஷன் அல்லது பணத்துக்காக, தெரிந்தே தான் வங்கிக்கணக்கு விபரங்களை தந்தால், அவர்களும் குற்றத்துக்கு துணை போகின்றனர் என்றுதான் பொருள். அதனால் அவர்களும் குற்றவாளிகளே. அவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள்..
வங்கிக்கணக்கு கொடுத்து உதவுபவர்களால்தான் நாட்டில் ஏராளமான மோசடிகள் நடக்கிறது. இதுபோன்று மோசடி நபர்கள் தொடர்பு கொண்டால், உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications