பழிக்குப் பழியாக சம்பவம்! கோவையில் ஜாமீனில் வெளியே வந்தவர் அடித்துக் கொலை! 4 பேரை தேடும் போலீசார்!
கோவை: கோவையில் விநாயகர் சதுர்த்தியின் போது நடந்த மோதலில் கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஜப்பான் என்று அழைக்கப்படும் பிரவீன் குமார் (வயது 24). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில காலமாக மைசூரில் உள்ள தென்னை நார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 7.30 மணி அளவில் கோவை வந்திருந்த பிரவீன் குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து
கெம்பட்டி காலனி, அசோக் அவென்யூ, பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் மறைவில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

மது அருந்திக்கொண்டு இருந்த போது திடீரென அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பிரவீன் குமாரிடம் தகராறில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பிரவீன் குமாரை கற்களாலும், பயங்கர ஆயுதங்களாலும் கை மற்றும் தலைப் பகுதிகளில் பலமாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த பிரவீன் குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று, பிரவீன் குமார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து செல்வபுரம் காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடந்த 2024 ஆம் ஆண்டு செல்வபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஏற்பட்ட மோதலில் கோகுல் கிருஷ்ணன் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர்தான் இந்த பிரவீன் குமார். கோகுல் கிருஷ்ணன் கொலைக்கு காரணமாக பிரவீன் குமாரை பழிவாங்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications