விளாத்திகுளம் கொடூரம்.. கனிமொழியின் பேச்சு மனிதத் தன்மையற்றது.. கொந்தளித்த நடிகை கௌதமி
கோவை: விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கனிமொழி எம்.பி-யின் பேச்சு மனிதத் தன்மையற்றது என்று நடிகை கௌதமி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையை அடுத்த பச்சாபாளையத்தில் நடைபெற்ற அதிமுக மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: விளாத்திகுளம் வன்கொடுமை, கொலை சம்பவம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியிருப்பது மனிதத் தன்மையற்றது.

பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஒரு ஆறுதல் கூடக் கூற முடியாத நீங்கள் எப்படி உங்களைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும். கரூர் சம்பவத்தில் இரவோடு இரவாக அறிக்கை தந்தவர்கள், விளாத்திகுளம் சம்பவத்தில் மெத்தனமாக இருப்பது ஏன். திமுக ஆட்சியில் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் கஞ்சா மற்றும் சிந்தடிக் போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் மிகப்பெரிய 'பெருமை' என்னவென்றால், போதைப்பொருள் பரவலால் இந்தத் தலைமுறையையும், அடுத்த இரண்டு தலைமுறைகளையும் நாசமாக்கி அழித்ததுதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் எத்தனை முனைப் போட்டி இருந்தாலும், அது திமுக மற்றும் அதிமுக இடையிலான நேரடிப் போட்டியாகவே இருக்கும். மற்றவர்கள் இடையில் வந்த 'தொல்லைகள்' போன்றவர்கள்.
நான்கரை ஆண்டுகளாக மக்களைக் கண்டுகொள்ளாத முதல்வர், தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் வழங்குவது மக்களை வெறும் வாக்கு வங்கியாகப் பார்ப்பதையே காட்டுகிறது. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதும் அவர்களுக்கு வாக்குரிமை வந்துவிட்டது என்பதற்காகத் தான்.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் அதிகரித்து வருகின்றன. காவல் துறையை ஏவி விட்டுப் போராட்டக்காரர்களை ஒடுக்குவதே இந்த ஆட்சியின் வாடிக்கை. மனிதத் தன்மைக்கு எதிரான இந்த ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். அது எதிர்வரும் தேர்தலில் கண்டிப்பாகப் பிரதிபலிக்கும் என்றார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications