Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மர்ம நபர்களை கண்காணிக்க ஸ்பெஷல் டீம்.. மக்கள் அச்சப்பட வேண்டாம்! ஆட்சியர் சமீரன் சொன்ன முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவை: அடுத்தடுத்து கோவையில் நடைபெறும் பெட்ரோல் குண்டு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு மாநகர பாஜக அலுவலகம் மீது அடையாளம் தெரியாத சில நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர்.

அதன் பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற்றது. இது அங்குப் பதற்றமான ஒரு சூழலை ஏற்படுத்தியது.

 பெட்ரோல் குண்டு வீசு

பெட்ரோல் குண்டு வீசு

கோவை உள்ள மாருதி துணிக்கடையிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஒப்பணக்கார வீதியில் உள்ள இந்த கடை உரிமையாளர் பாஜகவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அதேபோல திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில் பாஜக பிரமுகரின் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டது. மேலும், ஈரோட்டிலும் பாஜக நிர்வாகிக்குச் சொந்தமான கடை ஒன்றில் டீசல் குண்டு வீசப்பட்டுள்ளது.

 விசாரணை

விசாரணை

இது தவிரப் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுபோல அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

ஆலோசனை

ஆலோசனை

கோவையில் போலீசார் மற்றும் அதி விரைவு படையினர் உடன் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தலைமைச் செயலாளர் உடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவையில் பதற்றத்தைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து விளக்கிப் பேசினார்.

 பாதிப்பு இல்லை

பாதிப்பு இல்லை

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவையில் கடந்த ஒரு சில நாட்களாக நடந்த சம்பவங்கள் அனைவருக்கும் தெரியும். இவை ஆங்காங்கே நடந்த தனித்த நிகழ்வுகள் தான் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவங்களில் பொதுமக்கள் உயிருக்கோ அல்லது உடைமைக்கோ அவ்வித சேதமும் ஏற்படவில்லை.எனவே, கோவை மக்கள் பதற்றப்படத் தேவையில்லை.

 அச்சம் வேண்டாம்

அச்சம் வேண்டாம்

சிசிடிவி கேமாராக்களை கொண்டு குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மிக விரைவில் கைது செய்வோம். வெளிவட்டத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து கொண்டால் உடனடியாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் இதற்காகத் தனியாகச் சிறப்புக் குழுவை அமைத்து உள்ளோம். சமூக வலைத்தளங்களில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகள் பரவி வருகிறது.

 பொய் தகவல்கள்

பொய் தகவல்கள்

வெடிகுண்டு வெடித்ததாக எல்லாம் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அப்படி வெடிக்குண்டு சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "அனைத்து கேமாராக்களை கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம். சமூக வலைத்தளங்களில் சில இரு சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

 நடவடிக்கை பாயும்

நடவடிக்கை பாயும்

பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலான சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது கோவையில் சுமார் 3200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 28 இடங்களில் புதிதாகத் தற்காலிக சோதனை சாவடிகளை அமைத்து உள்ளோம். பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+