கோவை இளைஞரின் ஒரு நிமிட முட்டாள்தனம்.. மாமியார் இல்லை.. மனைவி கவலைக்கிடம்.. தவிக்கும் குழந்தைகள்
கோவை: விழுப்புரம் மாவட்டம் பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா என்பவர் கோயம்புத்தூரில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி மீனா என்பவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவா அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். சம்பவத்தன்று இரவு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சிவா இரும்பு கம்பியால் மீனாவைத் தாக்கினாராம். அப்போது அதைத் தடுக்க வந்த மாமியார் தனலட்சுமிக்கு நடந்த சம்பவம் உறவினர்களை அடிப்போக வைத்துள்ளது.
குடும்ப தகராறில் கணவன் அல்லது மனைவி ஆவேசத்தில் எடுக்கும் முடிவு மொத்த குடும்பத்தையும் நிலைகுலைய வைத்துவிடுகிறது. ஒருவருக்கு ஒருவர் தகராறில் ஈடுபடும் போது, நிதானத்தை இழந்து எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள். அப்போது கையில் கிடைக்கும் பொருளை எடுத்து தாக்குகிறார்கள்.

அந்த தாக்குதல் ஒருவருக்கு எமனாக மாறிவிடுகிறது. இதில் ஆத்திரத்தில் அறிவை இழந்து தாக்குதல் நடத்தியவர், காலத்திற்கும் சிறையில் தான் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். கோவையில் வேலை செய்து வரும் நபர், விழுப்புரத்தில் மாமியார், மனைவியை தாக்கி உள்ளார். இதில் மாமியார் உயிருடன் இல்லை.. மனைவி கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பாவந்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கு 30 வயது ஆகிறது. இவரது மனைவி மீனாவுக்கு 25 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு 5 வயதில், 3 வயதில் என 2 மகன்கள் உள்ளனர். இவர் கோயம்புத்தூர் பழமார்க்கெட்டில் சிவா வேலை செய்து வருகிறார். இதற்காக அவர், தனது குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மீனாவிடம் சிவா அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவிற்கு சிவா, தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதுபற்றி அறிந்த மீனாவின் தாயான ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி (65) தனது மகள், பேரன்களை பார்ப்பதற்காக பாவந்தூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மீனாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவா இரும்பு கம்பியால் தாக்கியாக கூறப்படுகிறது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தனது மருமகனை தடுத்தார். இதில் ஆத்திரமடைந்த சிவா, இரும்பு கம்பியால் மாமியாரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியான நிலையில் நிலைகுலைந்து சம்பவ இடத்திலயே இறந்தார். இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் மீனாவும் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீனாவை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை நேற்று கைது செய்தனர். தாயை கவலைக்கிடமான நிலையில், தந்தை சிறைக்கு சென்றுவிட்டார். பாட்டியும் உயிருடன் இல்லை.. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications