கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை திரும்பவில்லை.. அமெரிக்காவில் செட்டில் ஆகும் கோத்தபய?.. கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பம்!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் இருந்து வெளியேறி தாய்லாந்து நாட்டில் இருக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி மற்றும் மகனுடன் அமெரிக்காவில் குடியேற கிரீன் காடுக்கு விண்ணப்பித்துள்ளார்.

Recommended Video

    Rajapaksas உகாண்டா Factory-யில் ஈழத் தமிழர்கள்? | Gotabhaya கைது எப்போது? | *World

    இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடியால், விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது.

    இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட மக்கள் கடும் சிரமமடைந்தனர்.

     தாய்லாந்தில் வீட்டு சிறையில் கோத்தபாய ராஜபக்சே-வேறுவழியே இல்லாமல் ஆக.24-ல் இலங்கை திரும்ப திட்டமா? தாய்லாந்தில் வீட்டு சிறையில் கோத்தபாய ராஜபக்சே-வேறுவழியே இல்லாமல் ஆக.24-ல் இலங்கை திரும்ப திட்டமா?

     இலங்கையை விட்டு வெளியேறினார்

    இலங்கையை விட்டு வெளியேறினார்

    நாட்டின் இந்த நிலைமைக்கு ஆளும் ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் என அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் தீவிர போராட்டத்தினால், இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த மாதம் 13-ம் தேதி இலங்கையை விட்டு வெளியேறினார். தொடர்ந்து மாலத்தீவு சென்ற அவருக்கு அங்கும் எதிர்ப்பு கிளம்பியதால் சிங்கப்பூருக்கு பறந்தார். அங்கிருந்தபடியே இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

     தாய்லாந்தில் கோத்தபய..

    தாய்லாந்தில் கோத்தபய..

    இதற்கிடையே சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சேவுக்கு முதலில் 14 நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்டது. இதன்பின்னர் கடந்த 11-ம் தேதி வரை அவருக்கு சிங்கப்பூரில் தங்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விசா முடிந்ததால், சிங்கப்பூரில் இருந்து ராணுவ விமானம் மூலம் தாய்லாந்துதுக்கு கோத்தபய ராஜபக்சே புறப்பட்டார். அங்கு தலைநகர் பாங்காக்கில் கோத்தபய ராஜபக்சே தங்கியிருக்கிறார். தாய்லாந்து நாடும் மனிதாபிமான அடிப்படையில் தான் கோத்தபய ராஜபக்சேவுக்கு நாட்டில் தங்குவதற்கு அனுமதித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

     தாய்லாந்து போலீசார் விதித்த கெடுபிடி

    தாய்லாந்து போலீசார் விதித்த கெடுபிடி

    தற்போது பாங்காங்கில் உள்ள சொகுசு ஓட்டலில் கோத்தபய ராஜபக்சே தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் ஓட்டலில் தங்கியிருக்கும் கோத்தபய ராஜபக்சே ஓட்டலை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியே வரவேண்டாம் என தாய்லாந்து போலீசார் கேட்டுக்கொண்டதகவும் கூறப்பட்டது. மேலும் இங்கு இருக்கும் போது அரசியலில் ஈடுபட கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனால் அங்கு குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு அதாவது நவம்பர் மாதம் வரை தங்கியிருப்பார் என்றும் அதன் பின்னர் மீண்டும் இலங்கைக்கு செல்வார் என்றும் கூறப்பட்டது.

     திடீர் முடிவா?

    திடீர் முடிவா?

    ஆனால் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்ட கோத்தபய ராஜபக்சே ஆகஸ்டு 25ம் தேதியே இலங்கைக்கு செல்வதாக கூறப்பட்டது. அவரது திடீர் முடிவுக்கு தாய்லாந்தில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களே என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது திடீரென கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோத்தபய ராஜபக்சே தனது மனைவி மற்றும் மகனுடன் அமெரிக்காவில் குடியேற ஆசைப்படுவதாகவும், இதற்காக கிரீன் கார்டுக்கு அப்ளை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

     அமெரிக்கா செல்ல விருப்பம்

    அமெரிக்கா செல்ல விருப்பம்

    கோத்தபய ராஜபக்சேவின் மனைவி அமெரிக்க குடியுரிமை வைத்திருப்பதால், இந்த விதிகளின் படி அமெரிக்க கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் தகுதி இருப்பதகாவும், இதன் காரணமாக கடந்த மாதமே இதற்கான வேலையில் கோத்தபய ராஜபக்சேவின் வழக்கறிஞர்கள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. கோத்தபய ராஜபக்சே ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிகாவில் இருந்த நிலையில், இலங்கை அதிபராக வேண்டும் என்பதற்காக அங்கிருந்த குடியுரிமையை துரந்துவிட்டு இலங்கை வந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Former president Gotabaya Rajapakse, who left Sri Lanka and is in Thailand, has applied to Greenwood to immigrate to the United States with his wife and son.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X