சார் பெயர் மணிகண்டன்.. வச்சிருக்கிறது லேப்.. செய்த வேலையை பார்த்தீங்களா.. பதறிப்போன மனைவி!
கடலூர்: கடலூர் அருகே காதல் மனைவி 2 மகன்கள் இருக்கும் நிலையில் லேப் டெக்னீசியனின் பெயர் இன்னொரு பெண்ணின் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை என குறிப்பிடப்பட்டது. இதன்மூலம் இருவருக்கு இடையேயான கள்ளத்தொடர்பு வெளியானது. லேப் டெக்னீசியனை போலீசார் தேடுகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருபவர் மலர்கண்ணன். இவர் சித்ரா, என்பவரை காதலித்தார்.
இருவரும் 2009ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மலர்கண்ணன் கடலூர், புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் லேப்கள் வைத்து நடத்துகிறார்.

லேப்களில் பெண்கள்
இவர் சுகாதார நிலையத்துக்கு பணிக்கு செல்வதால் லேப்களில் பெண்களை பணிக்கு அமர்த்தினார். இந்நிலையில் சில பெண்களிடம் அவர் காதலை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து சித்ரா அதிர்ச்சியடைந்தார். மலர்கண்ணனை கண்டித்தார். இதனால் அவர் கோபமடைந்தார். இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

வரதட்சணை கொடுமை
இதற்கிடையே வரதட்சணை வாங்கி வரும்படி சித்ராவிடம், மலர்கண்ணன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்தததால் தனக்கு நிகழும் சம்பவங்களை பெற்றோரிடம் கூட முடியாமல் சித்ரா தவித்தார். இதனால் வீட்டிலேயே கண்ணீர் விட்டு அழுதபடி கணவர் மலர்கண்ணனின் கொடுமைகளை சகித்தபடி இருந்தார்.

பிறப்பு சான்றிதழில் பெயர்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலர் கண்ணன் லேபில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில் மலர்கண்ணன் பெயர் தந்தை என குறிப்பிடப்பட்டு இருந்தது. இருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதாக சித்ரா உறுதி செய்தார்.

போலீசில் புகார்
சம்பவம் குறித்து மலர்கண்ணனிடம் கேட்டார். அவர் சரியாக பதிலளிக்கவில்லை. மாறாக சித்ராவை அடித்து வீட்டைவிட்டு துரத்தினார். செய்வதறியாது தவித்த சித்ரா சம்பவம் குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் வரதட்சணை கொடுமை உள்பட சில பிரிவுகளில் மலர்கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே தன்மீது புகார் அளிக்கப்பட்டு இருப்பதை அறிந்த மலர்கண்ணன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடுவருகின்றனர்.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications