நீர் நிலைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு.. தீக்குளிக்க முயன்ற மக்கள்.. விருத்தாசலத்தில் பரபரப்பு
கடலூர்: விருத்தாசலத்தில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சிலர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, தாசில்தார் தனபதி, நகராட்சி கமிஷனர் சேகர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர், கடந்த 23ஆம் தேதி முதல் முல்லா ஏரியிலிருந்து கடைகளை அகற்றும் பணியை தொடங்கினர். முதற்கட்டமாக, கடைகளின் முகப்பு பகுதிகள் மட்டும் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதிகாரிகளிடம் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து வட்டாட்சியர் தனபதி, நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள கடை வீடுகளை தாங்களே முன்வந்து காலி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்படி காலி செய்யாவிட்டால், ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகள் மற்றும் வீடுகளை இடிக்கும் நிலை ஏற்படும் என உரிமையாளர்களை எச்சரித்தார்.
இந்நிலையில், கடலூர் ரோடு இந்திரா நகரில் உள்ள முல்லா ஏரி மற்றும் ஆலடி ரோட்டில் உள்ள நீர்நிலை களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகளை அகற்ற அதிகாரிகள், இரண்டு ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புடன் வீடுகள் மற்றும் கடைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென்று இந்திரா நகர் பகுதியில் இருந்து இருபதுக்கும் மேற்பட்டோர், மண்ணெண்ணெய் கேனுடன் வந்து, தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தடுக்க முயன்ற காவலர் ஒருவருக்கு கண்ணெரிச்சல் ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இப்பகுதியில் பதட்டம் நிலை வருவதால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, சிலர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications