Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தினமும் 2 சிறுமிகள் பலாத்காரம்.. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகராக மாறிப்போன டெல்லி! அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் உள்ள 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக தலைநகர் டெல்லி மாறியுள்ளது. 2021 நிலவரப்படி டெல்லியில் தினசரி 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றம், பலாத்காரம் உள்பட பல்வேறு குற்றங்களை தனித்தனியே மாநிலம் வாரியாக இந்த தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் தான் இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக 2021ல் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பாக விபரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக டெல்லி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

டெல்லி முதலிடம்

டெல்லி முதலிடம்

இந்தியாவில் உள்ள 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிராக 2021ல் பதிவான குற்றங்கள் வெளியாகி உள்ளன. இதில் நாட்டில் அதிகபட்சமாக டெல்லியில் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 13 ஆயிரத்து 892 குற்றங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2020ம் ஆண்டில் 9,782 குற்றங்கள் பதிவாகி இருந்த நிலையில் 2021ல் குற்றங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இதன்மூலம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.

டெல்லியின் பங்கு 32.20 சதவீதம்

டெல்லியின் பங்கு 32.20 சதவீதம்


இதன்மூலம் இந்தியாவின் உள்ள 19 மெட்ரோ நகரங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியின் பங்கு மட்டுமே 32.20 சதவீதமாக உள்ளது. மேலும் தினமும் டெல்லியில் 2 சிறுமிகள் வரை பலாத்காரம் செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிராக கடந்த ஆண்டு 3,948 கடத்தல் வழக்குகள், கணவரின் கொடுமை தொடர்பாக 4,674 வழக்குகள், 833 சிறுமிகள் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன.

அடுத்த இடங்களில் மும்பை, பெங்களூர்

அடுத்த இடங்களில் மும்பை, பெங்களூர்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லிக்கு அடுத்து 2வது இடத்தில் மும்பை உள்ளது. மும்பையில் கடந்த ஆண்டு 5,543 குற்றங்கள் பதிவாகி உள்ளன. 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிராக பதிவான வழக்குகளில் மும்பையின் பங்கு 12.76 சதவீதமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் டெல்லி, மும்பையை தொடர்ந்து 3-வது இடத்தில் பெங்களூரு இருக்கிறது. பெங்களூரில் கடந்த ஆண்டு 3,127 குற்றங்கள் பதிவாகி உள்ளன. 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிராக பதிவான வழக்குகளில் பெங்களூரின் பங்கு 7.2 சதவீதமாக உள்ளது.

 மொத்த குற்றங்கள் எவ்வளவு?

மொத்த குற்றங்கள் எவ்வளவு?

மொத்தமாக பார்த்தால் இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, பெங்களூர் உள்பட 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிராக 43,414 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 8,664 குற்றங்கள் கடத்தல் தொடர்பானது. இதில் 3,948 குற்றங்கள் டெல்லியில் மட்டுமே நடந்துள்ளது என்பது வருத்தமளிக்கும் விஷயமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+