டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தால் 5 சதவீத ஜிஎஸ்டி.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தால் கேன்சலேஷன் கட்டணத்துடன் 5 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீண்ட தூர பயணத்துக்கு பணக்காரர்கள் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தும் நிலையில் ஏழை, நடுத்தர மக்கள் ரயில் பயணத்தை தான் நம்பியுள்ளனர். இதனால் ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலிலும் கூட பயணிகள் தங்களின் வசதிக்கு ஏற்ப ஒவ்வொருவரும் பயணம் செய்கின்றனர். முன்பதிவு செய்யாமல் குறைந்த டிக்கெட் கட்டணத்தில் சாதாரண பெட்டியில் பொதுமக்கள் பயணம் செய்யும் வேளையில், டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்கின்றனர். ஏசி, செகண்ட் கிளாஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

மதுரை அருகே திடீரென தடம்புரண்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்.. விரைந்து வந்த அதிகாரிகள்.. நடந்தது என்ன? மதுரை அருகே திடீரென தடம்புரண்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்.. விரைந்து வந்த அதிகாரிகள்.. நடந்தது என்ன?

5 சதவீத ஜிஎஸ்டி கட்டணம்

5 சதவீத ஜிஎஸ்டி கட்டணம்

இந்நிலையில் தான் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு அதனை ரத்து செய்யும் பயணிகளிடம் இருந்து கேன்சலேஷன் கட்டணமாக குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டணத்துடன் சேர்த்து 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் கடந்த 3ம் தேதி வழிக்காட்டுதல்களை வெளியிட்டு இருந்தது.

கேன்சலேஷன் கட்டணத்துடன் ஜிஎஸ்டி

கேன்சலேஷன் கட்டணத்துடன் ஜிஎஸ்டி

இதையடுத்து தற்போது டிஆர்யூ எனும் ரயில்வேயின் வரி ஆய்வு பிரிவு (TRU)சுற்றறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்வது என்பதை இந்தியன் ரயில்வே ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்கிறது. இதுவரை ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டால் கேன்சலேஷன் கட்டணம் மட்டும் பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது அதனுடன் சேர்த்து ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்பட உள்ளது.

ஜிஎஸ்டி தொகை எவ்வளவு?

ஜிஎஸ்டி தொகை எவ்வளவு?

அதன்படி முதல் வகுப்பு அல்லது ஏசி பெட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்து அதனை ரத்து செய்பவர்களிடம் மட்டுமே ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி ஏசி அல்லது முதல் வகுப்பு ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ரூ.240 கேன்சலேஷன் கட்டணமாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இதற்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்து ரூ252 ஆக வசூலிக்கப்படும்.

செகண்ட் ஸ்லீப்பருக்கு இல்லை

செகண்ட் ஸ்லீப்பருக்கு இல்லை

இருப்பினும் இந்த ஜிஎஸ்டி பிடித்தம் செய்யும் நடைமுறை செகண்ட் ஸ்லீப்பர் மற்றும் இருக்கை வசதி கொண்டு டிக்கெட்டுகளுக்கு பொருந்தாது'' என ரயில்வே வரி ஆய்வு பிரிவு சார்பில் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம் சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு ரத்துக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது.

English summary
Now that the central government has announced that 5 percent GST will be charged along with the cancellation fee if the train ticket reservation is cancelled, now it has been explained.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X